அப்போ ஸ்மார்ட்போன், இப்போ வாஷிங் மெஷின், சாமசங் அம்போ!

சாம்சங் நிறுவனத்தைப் பின்தொடரும் சோகம், ஸ்மார்ட்போன் குருவிகளைத் தொடர்ந்து வாஷிங் மெஷின்களைத் திரும்பப் பெறுகின்றது.

Written By:

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகளை வெளியிட்டுத் திரும்பப் பெற்ற சம்பவம் ஓரளவு மறைந்து வரும் நிலையில் சாம்சங் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வெவ்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் சாம்சங்கிற்குத் திரும்பப் பெறும் ஆண்டு போலவே இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாஷிங் மெஷின்

சில முறை ஸ்மார்ட்போன் கருவிகளைத் திரும்பப் பெற்று வந்த சாம்சங் இம்முறை வாஷிங் மெஷின் கருவிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

அறிவிப்பு

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 2.8 மில்லியன் டாப்-லோடு வாஷிங் மெஷின் கருவிகளைத் திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தது.

கருத்து

திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வாஷிங் மெஷின் கருவிகள் பயன்படுத்தும் போது சேஸிஸ் பாதியிலேயே கழன்று விடுவதால் பயனர் காயப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நுகர்வோர் பொருள் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல்

வாஷிங் மெஷின் கோளாறு காரணமாகக் காயமுற்றதாக இதுவரை தென் கொரிய நிறுவனத்திற்கு ஒன்பது பேர் முறையிட்டிருப்பதாக இது குறித்து வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாடல்

மொத்தம் 34 டாப்-லோடு வாஷிங் மெஷின் மாட்டல்களைத் திரும்பப் பெறுவதாகச் சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத வாக்கில் 2.5 மில்லியன் நோட் 7 கருவிகளைச் சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Following Galaxy Note 7 recall, Samsung recalls 2.8 million washing machines
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்