சாம்சங் மாடல்களுக்கு சலுகைகள் : பிளிப்கார்ட்டில் மட்டும்!

Written By:

பிரபல இணையதள விற்பனை தளமான பிளிப்கார்ட், 'Samsung Days sale' அதாவது சாம்சங் தின விற்பனை என்ற பெயரில் சாம்சங் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு மட்டும் பிரத்தியேக சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் படி பல்வேறு சாம்சங் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கும் பிரத்தியேக சலுகைகள் மற்றும் விலை குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2016)

அதன் படி சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2016) கருவிக்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்பட்டு தற்சமயம் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதே போல் ரூ.10,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஆன் 7 கருவி ரூ.9,690க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கேலக்ஸி நோட்

சாம்சங் கேலக்ஸி நோட்4 மற்றும் கேலக்ஸி எஸ்5 போன்ற கருவிகளும் விலை குறைக்கப்பட்டு முறையே ரூ.27,900 மற்றும் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2016) மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கருவியில் அல்ட்ரா டேட்டா சேவிங் மோடு மற்றும் எஸ்-பைக் மோடு போன்ற புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடிவமைப்பு

2016 கேலக்ஸி ஜெ5 பதிப்பில் மெட்டல் ஃபிரேம் வடிவமைப்பு, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

திரை

சாம்சங் கேலக்ஸி ஜெ5 கருவியில் 5.2 இன்ச் எச்டி AMOLED திரை, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

மெமரி

மெமரியை பொருத்த வரை 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.

கேமரா

சாம்சங் கேலக்ஸி ஜெ5 கருவியில் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 3100 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஆன்7

நவம்பர், 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கேலக்ஸி ஆன்7 கருவியிலும் அல்ட்ரா டேட்டா சேவிங் மோடு, 5.0 இன்ச் சூப்பர் AMOLED எச்டி திரை வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

கேலக்ஸி ஆன்7 எக்சைனோஸ் 3475 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

சாம்சங் கேலக்ஸி ஆன்7 கருவியில் 4ஜி எல்டிஇ அம்சம், ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம் மற்றும் 2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Flipkart offers big discounts on Samsung Galaxy Phones Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்