ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் : விலைக்குறைப்பு, எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள்.!

ப்ளிப்கார்ட்ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளம் அதன் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் விற்பனையை நடத்துகிறது. அதில் கிடைக்கும் சலுகைகள் பற்றிய தொகுப்பே இது.

Written By:

ப்ளிப்கார்ட் வலைத்தளம் அதன் இரண்டாம் நாள் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையை தொடங்கியுள்ளது அதன் இ-காமர்ஸ் தலத்தில் பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையானது புதன்கிழமை முடிவுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் விற்பனையில் அனைத்து எஸ்பிஐ டெபிட் மற்றும் க்ரெடிட் அட்டை பயனர்களுக்கும் 10% சலுகை வழங்கப்படுகிறது. அதாவது ரூ 5,999/-க்கு பொருட்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.1500/- தள்ளுபடி பெறுவார்கள். முன்கூட்டியே உங்கள் அட்டை விவரம் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்துள்ளீர்கள் என்பதை ஷாப்பிங் தொடங்கும் முன் உறுதி செய்துகொள்ளவும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தள்ளுபடி வாய்ப்பு

இந்த விற்பனையில் மொபைல்கள், டேப்ளெட்கள், மின்னணு, ஃபேஷன், உபகரணங்கள், வீட்டு மற்றும் மேஜை நாற்காலிகள் உட்பட பல பொருட்களுக்கு தள்ளுபடி வாய்ப்புகளை பெற முடியும். குறிப்பாக கூகிள் பிக்சல், ஐபோன் 7, ஐபோன் 6, ஐபோன் 5எஸ், லெனோவா கே 5 நோட், லீஈகோ லீ 1எஸ் ஈகோ, மோட்டோ இ3 பவர், சாம்சங் கேலக்ஸி ஆன்8 மற்றும் இன்னும் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வாய்ப்புகளை பெற முடியும்.

ஒன்ப்ளஸ்3, கூகிள் பிக்சல் மற்றும் கூகுள் பிக்சல் எக்ஸ்எல்

ஒன்ப்ளஸ்3 ஸ்மார்ட்போன் இந்த இ-காமர்ஸ் தளத்தில் ரூ.18,999./-என்ற மிகவும் ஆரவார கூச்சல் மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளது. கூகிள் பிக்சல் மற்றும் கூகுள் பிக்சல் எக்ஸ்எல் கருவிகளுக்கு ரூ.25,000/- வரை எக்ஸ்சேன்ஞ் சலுகை பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்

தவிர ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்களிலும் 8 சதவிகித விலை குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவிகளுக்கும் ரூ.20,000/- வரையிலாக எக்ஸ்சேன்ஞ் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ப்ளே

இந்த சலுகையில் மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ப்ளே கருவிகளும் தள்ளுபடி விலையில் கிடக்கின்றது ரூ.22,000/- என்ற எக்ஸ்சேன்ஞ் சலுகை பெற முடியும். பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஆன ஐபோன் 6எஸ், ஐபோன் எஸ்இ, மோட்டோ எக்ஸ் ஸ்டைல் மற்றும் ஹூவாய் பி9 ஆகியவைகளுக்கும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி5, சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் அசுஸ் சென்போன் 3

மறுபக்கம் எல்ஜி ஜி5 கருவி மீது 14,000 ஆஃப், மற்றும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் அசுஸ் சென்போன் 3 ஆகிய இரண்டு கருவிகளிலும் முறையே ரூ.2,000/- மற்றும் ரூ.1,000/- விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபாட், லேப்டாப்

இந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் அதிகபட்சமாக ஆப்பிள் ஐபாட்களுக்கு 22% ஆஃப் வழங்கப்பட்டுள்ளது. உடன் லேப்டாப்களுக்கும் தள்ளுபடிகள், விலைகுறைப்பு மற்றும் எக்ஸ்சேன்ஞ் ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்துங்கள்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Flipkart Big Shopping Days Sale: Discounts, Exchange Offers. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்