சாம்சங் நிறுவனம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!

Written By:

சாம்சங் நிறுவனம் ஒரே ஒரு கருவியை வெளியிட்டு உலகளவில் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவித்து வருகின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு போட்டியாக அந்நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து அந்தக் கருவிகள் திரும்பப்பெறப்பட்டன.

1938 ஆம் ஆண்டு சாம்சங் சங்ஹோ என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதலில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வந்தது. பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்நிறுவனம் மின்சாதன கருவிகளில் கவனம் செலுத்தத் துவங்கி இன்று உலகின் பிரபல நிறுவனமாக விளங்குகின்றது.

அவ்வாறு கடினமான சூழ்நிலையைச் சந்தித்து வரும் சாம்சங் நிறுவனம் குறித்து பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வெற்றியைக் குறிக்கும் பெயர்

பிரான்டு பெயர்கள் எப்பவும் அர்த்தம் கொண்டவையாகவே இருக்கும். உதாரணத்திற்கு அமெரிக்க நிறுவனமான நைக் கிரேக்க கடவுள் நைக் பெயரைத் தழுவி சூட்டப்பட்டது. இதே போல் சாம்சங் நிறுவனத்தின் பெயர் காரணம் இது தான்.

சாம் என்றால் மூன்று, சங் என்றால் நட்சத்திரங்கள் எனப் பொருள்படுகின்றது. மேற்கத்திய கலாச்சாரங்களில் நட்சத்திகங்கள் வெற்றியைக் குறிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விளம்பரம்

இன்று சாம்சங் நிறுவனம் இத்தகைய பிரபல நிறுவனமாக இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஸ்மார்ட்போன்களின் துவக்கக் காலத்திலேயே சந்தையில் இருந்தது, மற்றொன்று அதிகப்படியான விளம்பரங்களை மேற்கொள்வது.

அதன் படி சாம்சங் நிறுவனம் விளம்பரங்களுக்கு மட்டும் 3.3 பில்லியன் வரை செலவிடுகின்றது குறிப்பிடத்தக்கது.

 

குறிக்கோள்

சாம்சங் நிறுவனத்தைப் பொருத்த வரை தரத்தை விடக் கருவிகளின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இது சில காலத்திற்கு நல்ல பலன்களை வழங்கியது. இதனை அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லீ குன்-ஹீ, 'மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

1955 ஆம் ஆண்டு மொபைல் போன்களின் தரம் குறைவாக இருந்ததால் பில்லியினுக்கும் அதிகமான கருவிகளை ஊழியர்கள் முன்னிலையில் தீயிட்டு எரித்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புர்ஜ் கலிஃபா

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டுமானம் உருவாக சாம்சங் நிறுவனமும் முக்கிய பங்கு வகித்துள்ளது. துபாயில் அமைந்திருக்கும் இந்தக் கட்டிடம் 828 மீட்டர் உயரம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி என்றாலும் அந்நிறுவனத்தின் கருவிகளுக்கு சாம்சங் சில உதிரிப் பாகங்களை தயாரித்து வழங்கி வருகின்றது. சாம்சங் தயாரிக்கும் பல்வேறு உதிரிப் பாகங்கள் ஆப்பிளின் கருவிகளுக்கு பொருத்தப்பட்டு வருகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
FIVE FUN FACTS ABOUT SAMSUNG YOU DIDN'T KNOW
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்