நிங்க ஜயோ வாடிக்கையாளர்களா? உஷாராக இருங்க பாஸ்.!

இங்கே சில கேள்விகள் உங்களிடம் கேட்க்கப்படும், அதற்கு நீங்கள் அளிக்கும் பதிலில் இருந்தே ஜியோ சேவைக்கு - ஏன் மாற வேண்டும்.? ஏன் மாறக்கூடாது என்பது பற்றிய புரிதலை, தெளிவை நீங்கள் பெற்று விடுவீர்கள்.!

|

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய கட்டண திட்டங்கள் களத்தில் இறங்கி - இலவசங்களை புறந்தள்ளிவிட்டு - நேரடியாக உங்கள் கைகளை அடையவுள்ளன. அதற்கு முன்பு நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்களின் சில விடயங்களை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

அதிவேக 4ஜி டவுன்லோட் வேகம் பெற ஒரு தந்திரமான வழி இருக்கு.!

ஏனெனில், இலவசமாக சேவைகள் வேண்டுமென்று நாம் கேட்கவுமில்லை, வழங்கப்பட்ட சலுகைகளை நாம் அனுபவிக்காமலும் விடவில்லை - அதுவொருபக்கம் இருக்க, இனி நாம் நமது பணத்தை ஜியோ சேவைகளின் மீது செலவழிக்கப்போகிறோம். ஆக, ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்களின் சில "வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த" சமாச்சாரங்கள் பற்றிய விவரங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

ரூ.309, ரூ.509, ரூ.244, ரூ.399, ரூ.345, ரூ.352, ரூ.297, ரூ.447, ரூ.249/- எது பெஸ்ட்.!?

இங்கே சில கேள்விகள் உங்களிடம் கேட்க்கப்படும், அதற்கு நீங்கள் அளிக்கும் பதிலில் இருந்தே ஜியோ சேவைக்கு - ஏன் மாற வேண்டும்.? ஏன் மாறக்கூடாது என்பது பற்றிய புரிதலை, தெளிவை நீங்கள் பெற்று விடுவீர்கள்.!

கேள்வி #01

கேள்வி #01

ஜியோ ப்ரைம் சேவைகளின் செல்லுபடி காலம் ஒரு மாத காலம் அல்ல, 29 நாட்கள் தான் என்பதை நீங்கள் அறிவீர்களா.? அதாவது ரூ.303/- திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 28ஜிபி தரவை வழங்கும். இதில் நீங்கள் தெளிவாக உள்ளீர்களா.?

கேள்வி #02

கேள்வி #02

இந்நேரம் நம்மில் பலர் நிச்சயமாக நாள் ஒன்றிற்கு 1ஜிபிக்கும் மேலான இலவச தரவை பயன்படுத்தி பழகியிருப்போம். அப்படியாக பலருக்கு 28 நாள் செல்லுபடியாகும் காலக்கெடு இருந்தாலும் கூட பயன்படுத்த டேட்டா இருக்காது. இந்த தருணத்தில் மாதத்தின் நடுவில் டேட்டா தீர்ந்தால் ரூ.51/-க்கு 1ஜிபி, ரூ.91/-க்கு 2ஜிபி, ரூ.201/-க்கு 5ஜிபி மற்றும் ரூ301/-க்கு 10ஜிபி ஆகிய நான்கு கூடுதல் தொகுப்புக்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.? அதற்கு நீங்கள் ரெடியா.?

கேள்வி #03

கேள்வி #03

ஜியோ பயனர்கள் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலாக தினசரி முற்றிலும் இலவசமான 4ஜி தரவை அனுபவிக்க முடியும் மற்றும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா உங்களின் தினசரி டேட்டா எல்லை பயன்பாட்டு வரம்பில் சேர்த்துக்கொள்ளப்படாது - இந்த நன்மையை பற்றி நீங்கள் அறிவீர்கள்.??

கேள்வி #04

கேள்வி #04

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய உறுப்பினர் திட்டம் என்பது ஜியோ ப்ரைம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உறுப்பினர் திட்டத்தின் கேள் இணைய நீங்கள் வருடத்திற்கு ரூ.99/- செலுத்த வேண்டும். இதற்கு நீங்கள் தயாரா.?

கேள்வி #05

கேள்வி #05

ஒரு ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆனவர் மாதம் ரூ.303/- என்ற ஒரு நிலையான அறிமுக விலை கொண்ட திட்டத்தின் கீழ் நிறுவனத்தின் 'ஹேப்பி நியூ இயர்' திட்டநன்மைகளை அனுபவிக்க தொடரலாம். ரூ.303/- என்ற விலை என்பது உங்களின் பட்ஜெட்டின் கீழ் அடங்குகிறதா.?

கேள்வி #06

கேள்வி #06

ஹேப்பி நியூ இயர் சலுகை போலின்றி அதாவது எந்த செயல்பாடும் இல்லாமல் வெல்கம் ஆப்ரில் இருந்து தானாகவே ஹேப்பி நியூ இயர் ஆபருக்கு சலுகைகள் இடம்பெயர்ந்ததை போல இல்லாமல் மேலும் 'ஹேப்பி நியூ இயர்' வாய்ப்பை கட்டண திட்டங்களின் கீழ் தொடர பயனர்கள் ஜியோ ப்ரைம் சேவைக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா.?

கேள்வி #07

கேள்வி #07

ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் மாணவர்கள் கூடுதலாக 25% 4ஜி மற்றும் வைஃபை தரவை அனுபவிக்க முடியும். இந்த இலாபங்களை அனுபவிக்க நீங்கள் உரிய, சரியான அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.?

கேள்வி #08

கேள்வி #08

நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் சந்தாதாரராக இணைய கடைசி தேதி மார்ச் 31 2017 என்பதை அறிவீர்களா.? ஏற்கனவே சேவையின்கீழ் இருக்கும் பயனர்கள் மைஜியோ ஆப் வழியாக அல்லது நிறுவனத்தின் வலைத்தளத்தில் உள்நுழைவதின் மூலமாக ஜியோ ப்ரைம் சந்தாதாரராக இணைந்துகொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.?

ஜியோ சமாச்சாரங்கள்

ஜியோ சமாச்சாரங்கள்

மேற்கண்ட கேள்விகளில் இருந்து, அதற்கு உங்கள் மனதிற்குள் நீங்கள் உங்களுக்கே கூறிக்கொண்ட பதில்களில் இருந்தே புதிய ஜியோ திட்டங்களின் "வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த" சமாச்சாரங்கள் பற்றிய தெளிவை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அந்த புரிதலில் இருந்தே ஜியோ சேவைக்கு - ஏன் மாற வேண்டும்.? ஏன் மாறக்கூடாது.? என்ற தெளிவை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்றும் நம்புகிறோம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

முற்றிலும் இலவசமாக ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெறுவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Few questions before you choose Reliance Jio's new tariff plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X