உங்களுக்கே தெரியாமல் திருடப்படும் உங்களின் பணம்.!

"என் அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்தா.. திருடனுக்கு திருடுறதே வெறுத்துப்போவும். நான் ஒன்னும் லட்சம் லட்சமா சம்பாதிக்கல, ஆக எனக்கு கவலை இல்ல" என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

|

ஏற்கனவே நாம் ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பிங்கிலும் ஏமாறுகிறோம். அதாவது ரூ.100/- மதிப்பு கொண்ட ஒரு பொருளுக்கு ரூ.250/- என்று விலை நிர்ணயம் செய்து அதற்கு ரூ.100/- அதிரடி தள்ளுபடி என்று கூறி ரூ.150/-க்கு விற்று லாபம் பார்க்கும் ஒரு அடிப்படையான மற்றும் ஆன்லைன் வியாபாரிகளுக்கான ஒற்றுமையான பகல் கொள்ளைகளுக்குள் சிக்கி கிடக்கிறோம் நாம் -அதைத்தான் ஏமாறுகிறோம் என்று சுட்டி(குத்தி)க்காட்டினேன்.!

ஒருபக்கம் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களே களத்தில் குதித்து நம் சம்பாத்தியங்களோடு விளையாடி கொண்டிருக்க மறுபக்கம் ஆன்லைன் ஷாப்பிங்கை அடித்தளமாக கொண்டு நாம் எப்போது சிக்குவோம், எப்படி நம் பணத்தை 'ஆட்டையப்போடலாம்' என்று காத்துக்கிடக்கிறது புத்திக்கூர்மை மிகுந்த ஒரு திருட்டு கும்பல்.

எப்படியெல்லாம் திருடப்படுகிறது.?

எப்படியெல்லாம் திருடப்படுகிறது.?

"என் அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்தா.. திருடனுக்கு திருடுறதே வெறுத்துப்போவும். நான் ஒன்னும் லட்சம் லட்சமா சம்பாதிக்கல, ஆக எனக்கு கவலை இல்ல" என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் உழைப்பில் உருவான 10 ரூபாய்க்கும் ஒரு மதிப்புண்டு. ஆக, ஆன்லைன் ஷாப்பிங் வழியாக உங்க பணம் எப்படியெல்லாம் திருடப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்வதின் மூலம் உங்கள் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

பார்மிங் (Pharming)

பார்மிங் (Pharming)

அதாவது ஆண்லைன் தகவல் திருடர்கள் போலி இணையத்தளம் ஒன்றை வைத்து ஏமாற்றுவர். நீங்கள் தெரியாமல் கிளிக் செய்யும் இணைப்புகள் உங்களை அச்சு அசலாக உண்மையான தளம் போன்றே தெரியுமொரு போலி இணையத்தளம் ஒன்றிற்கு கொண்டு செல்லும். அதனை தொடர்ந்தால் உங்களின் அனைத்துக் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம்

கீஸ்ட்ரோக் லாகிங் (Keystroke logging)

கீஸ்ட்ரோக் லாகிங் (Keystroke logging)

இங்கு நீங்கள் டவுன்லோடு செய்யும் மென்பொருள்களைப் பயன்படுத்தித் திருடர்கள் உங்களின் கீ ஸ்ட்ரோக்'களை ஆய்வு செய்து உங்களின் கடவுச்சொல், கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவர்.

மால்வேர் (Malware)

மால்வேர் (Malware)

தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தி வங்கி சர்வர் மற்றும் ஏடிஎம் கணினிகளில் இருக்கும் தகவல்களை அழித்துப் பயனர்களின் தகவல்களை அணுகுவர்

பிஷிங் மற்றும் விஷிங் (Phishing & vishing)

பிஷிங் மற்றும் விஷிங் (Phishing & vishing)

பிஷிங் என்பது நம்பகமான நிறுவனங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்களைத் திருடுவதாகும். பிஷிங் என்பது மொபைல் போனில் போலி எஸ்எம்எஸ் மூலம் தகவல்களைத் திருடுவதாகும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றிக் கடவுச்சொல், பின் அல்லது அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்டவற்றைத் திருடுவர்.

சிம் ஸ்வைப் (SIM swipe)

சிம் ஸ்வைப் (SIM swipe)

இங்கு உங்களின் போலி அடையாளச் சான்றுகளை வைத்து டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து போலி சிம் கார்டு வாங்குவர். பின் டெலிகாம் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தும் ஒரிஜினல் சிம் கார்டினை டி-ஆக்டிவேட் செய்திடுவர், இதைப் பயன்படுத்தி ஒன் டைம் பாஸ்வேர்டு கொண்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வர்.

ஸ்டோர்

ஸ்டோர்

முதலில் எல்லாவற்றிக்கும் மேலாக, நீங்கள் பாதுகாப்பற்ற ஆப்ஸ்களைப் பயன்படுத்தும் போது உங்களின் தகவல்கள் எந்நேரத்திலும் திருடப்படும் அபாயம் அதிகம். ஆக நீங்கள் டவுன்லோட் செய்யும் ஆப்ஸ்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பெறுகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Few methods hackers use steal your money while shopping online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X