பார்த்து பத்திரமா இருங்கள், பதற வைக்கும் போலி போக்கிமான்!

Written By:

கடந்த மாதம் உலகின் சில நாடுகளில் வெளியாகி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் அதிகமானோர் விளையாடி வரும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி கேம் தான் போக்கிமான் கோ.

ஸ்மார்ட்போன் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி கேமான போக்கிமான் கோ பல்வேறு நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் போலி போக்கிமான் ஆப்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க சைபர் செக்யூரிட்டி வில்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அறிக்கை

இது குறித்து சிஇஆர்டி அதாவது கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT-In) எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் போக்கிமான் கோ போலி ஆப் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தகவல்

இது போன்ற போலி ஆப்கள் தகவல்களைத் திருடுவதோடு கருவிக்கும் பாதகம் விளைவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாம் தரப்பு இணையதளங்களில் போக்கிமான் கோ போலி ஆப்கள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றது.

ஒரிஜினல்

பெரும்பாலான போலி ஆப்கள் உண்மையான ஆப் போன்று இருப்பதோடு பயனர்களை ஐந்தாம் கட்டம் வரை விளையாட அனுமதிக்கின்றது. இது போல் நிறையப் போலி ஆப்கள் இருக்கின்றது.

வைரஸ்

சில போலி பதிப்புகள் லாக்ஸ்கிரீன் செயலிகளாக இருக்கின்றன, ஆனால் சில பதிப்புகள் உங்களது ஸ்மார்ட்போன் கருவியிக்கு ஒட்டு மொத்தமாக ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஇஆர்டி

இந்திய இண்டர்நெட் உலகில் மேற்கொள்ளப்படும் ஹேக்கிங், வைரஸ் தாக்குதல், தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை சிஇஆர்டி மேற்கொள்ண்டு வருகின்றது.

போலி

சிஇஆர்டி சார்பில் இது வரை மூன்று போலி பதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை 'Pokemon GO Ultimate', 'Guide & Cheats for Pokemon Go' மற்றும் 'Install Pokemongo' போன்ற பெயர்களில் இணையத்தில் கிடைக்கின்றது.

பழுது

இந்த ஆப்கள் கருவியினை ஒட்டு மொத்தமாக லாக் செய்யும் திறன் கொண்டவையாகும். கட்டாயமான ரீஸ்டார்ட் செய்தால் மட்டுமே கருவியின் மெனுவிற்கு செல்ல முடியும்.

இயக்கம்

கருவியை ரீஸ்டார்ட் செய்தாலும் இந்த ஆப் பின்னணியில் இயங்கி பல்வேறு தளங்களுக்குப் போலி ஆப் பதிவிறக்கம் செய்யக்கோரும் தகவல்களை அனுப்பும்.

நிறுவனம்

போலி ஆப் மூலம் பயனர்களின் தகவல்களை மற்றவருக்கு வழங்குவதோடு எவ்வித அனுமதியின்றி பல்வேறு செயலிகளைக் கருவியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் சிஇஆர்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு

இந்தியாவில் இன்னும் வெளியாகாத போக்கிமான் கோ, கேமினை திருட்டுத்தனமாக இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது உங்களது ஸ்மார்ட்போனினை காப்பாற்றும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Fake Pokemon GO apps found in Indian cyberspace Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்