இந்தியாவின் சொந்த ஆப்பரேடிங் சிஸ்டம் : வியக்க வைக்கும் தகவல்கள்.!!

By Meganathan
|

நம்மில் பெரும்பாலானோருக்கும் இது தெரியாது. இந்தியாவின் சொந்த இயங்குதளம் இருப்பது எத்தனைப் பேருக்கு தெரியும். இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் இயங்குதளம் தான் இன்டஸ் ஓஎஸ். இந்தியாவில் ஃபர்ஸ்ட்டச் என அழைக்கப்படும் இந்த இயங்குதளம் குறித்த சில வியக்க வைக்கும் தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்...

பயனர்கள்

பயனர்கள்

இன்டஸ் ஓஎஸ் வெளியான மூன்று மாத காலத்தில் சுமார் 30 லட்சம் பயனர்களை பெற்றுள்ளது. இந்தாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான சந்தையில் இந்தியாவில் சாம்சங் டைசன், மைக்ரோசாப்ட் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களை விட அதிக பங்குகளை கொண்டு முன்னணியில் இருக்கின்றது.

இந்தியா

இந்தியா

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் அதிகளவு பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்டஸ் ஓஎஸ் மைக்ரோமேக்ஸ் கருவிகளில் சுமார் 13 மாடல்களில் வழங்கப்படுகின்றது.

மும்பை

மும்பை

இன்டஸ் ஓஎஸ் நிறுவனம் மும்பையைச் சேர்ந்ததாகும். இதன் அலுவலகம் தில்லி மற்றும் தாக்காவில் அமைந்துள்ளது.

ஸ்கின்

ஸ்கின்

கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைச் சார்ந்து இயங்குகின்றது. ஒன் பிளஸ் கருவிகள் சைனோஜென் ஓஎஸ் மற்றும் சியோமி கருவிகள் UIX சார்ந்த இயங்குவதைப் போல் இதுவும் இயங்குகின்றது.

அம்சம்

அம்சம்

இன்டஸ் ஓஎஸ் கொண்டிருக்கும் விசேஷ கீபோர்டு மூலம் மொழிபெயர்ப்பு செய்து கொள்ள முடியும். இன்டஸ் ஸ்வைப் என அழைக்கப்படும் இந்த அம்சம் வலது மற்றும் இடது புறங்களில் ஸ்வைப் செய்தால் வேலை செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது.

டெக்ஸ்ட்

டெக்ஸ்ட்

இன்டஸ் ஓஎஸ்'இல் இருக்கும் எழுத்துக்களைத் தேர்வு செய்தால் ஆதனினை இயங்குதளம் தேர்வு செய்த எழுத்துக்களை வாசிக்கும்.

ஆப் பஜார்

ஆப் பஜார்

இன்டஸ் ஓஎஸ் தனக்கென பிரத்தியேக ஆப் பஜார் ஒன்றை வழங்குகின்றது. இங்குப் பயனர்கள் தங்களது சொந்த மொழியில் ஆப் டவுன்லோடு செய்து கொள்ளலாம், இதற்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் கிரெடிட் கார்டு தேவையில்லை.

மொழி

மொழி

இன்டஸ் ஓஎஸ் மொத்தம் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் தரவுகளை வழங்குகின்றது. இதில் சுமார் 25,000க்கும் அதிகமான ஆப்ஸ்களும் இருக்கின்றது. இதில் பதிவிறக்கம் செய்யப்படும் அளவு சுமார் 130% என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆல் இன் ஒன் கீபோர்டு

ஆல் இன் ஒன் கீபோர்டு

இன்டஸ் ஓஎஸ் ஆல் இன் ஒன் கீபோர்டு மூலம் சுமார் 12 மொழிகளில் டைப் செய்ய முடியும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒடிஸ்ஸா, அசாமீஸ், பெங்காலி, உருது, பஞ்சாபி, கன்னடா, குஜராத்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் கீபோர்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Facts to Know About India's Own Smartphone OS Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X