இரத்த நிலா : இயேசு மறுபிறப்பு; பூகம்பம்; பூமியின் அழிவு..?!

Posted by:

இயற்கை கொஞ்சம் வித்தியாசமாக, அல்லது கொஞ்சம் விசித்திரமாக நடந்து கொண்டால் போதும், உடனே ஒரு பக்கம் "உலகம் அழிய ஆரம்பித்து விட்டது" என்று குரல்கள் ஓங்கும், மறுபக்கம் "அறிவியல் என்று ஒன்று இருக்கிறது, அதை முதலில் நம்புங்கள். அது பொய் சொல்லாது" என்ற குரல்கள் ஓங்கும்..!

உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

அப்படியாக நாளையும் நாளை மறுநாளும் (செப்டம்பர் 27 மற்றும் 28, 2015) உலகின் பல்வேறு இடங்களில் தோன்ற இருக்கும் இரத்த நிலா பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.

உலகம் 15 நாட்களுக்கு இருளில் மூழ்கும் : நாசா உறுதி..!?

அதில் "இயேசு மறுபிறவி எடுப்பார்", "இரத்த நிலா பெரும் பூகம்பங்களை ஏற்படுத்த போகிறது" என்பது தொடங்கி இது வெறும் "ஒரு இயற்கையான நிகழ்வு தான்" என்பது வரை பல வகையான புரளிகளும், நம்பிக்கைகளும், கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சிவப்பு :

ரத்த நிலா - என்பது முழு சந்திர கிரகணத்தின் போது வெள்ளை நிலா முழுமையாக செம்பு கலந்த சிவப்பு நிறத்தில் உருமாறி விடும்..!

செப்டம்பர் :

அப்படியாக, இந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி அல்லது 28-ஆம் தேதி அன்று ரத்த நிலா உருவாக இருக்கிறது..!

சூரியஒளி :

நிலாவில் ஏற்படும் இந்த சிவப்பு நிறத்திற்கு காரணம் உலகின் முறிவடையும் சூரியஒளி தான் காரணம் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்..!

'எண்ட் டைம் பிலிவர்ஸ்' :

ஆனால், ரத்த நிலா என்பது உலக அழிவின் ஆரம்பம் என்கிறார்கள் 'எண்ட் டைம் பிலிவர்ஸ்' (End-times believers) அதாவது உலகம் அழியும் என்று நம்புபவர்கள்..!

பூகம்பம் :

அதை தொடர்ந்து ரத்த நிலா தோன்றுதல் மூலம் உலகில் பயங்கரமான நில நடுக்கங்கள் ஏற்பட இருக்கிறது என்று சிலர் அறிவித்துள்ளனர்.

28 நாட்களுக்குள் :

மேலும் ரத்த நிலா தோன்றிய 28 நாட்களுக்குள் உலகம் அழியும் என்ற வதந்தியும் இன்டர்நெட்டில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது..!

இயேசு பிறப்பு :

அமெரிக்காவை சேர்ந்த பெரும் கிருஸ்துவ அமைப்பை சேர்ந்த இருவர், பைபிள் அடிப்படையில் இரத்த நிலா என்பது இரண்டாம் இயேசு பிறப்பு நடக்க போவதற்கான 'சமிக்ஞை' (Siganl) என்று பரப்புரை செய்து கொண்டிருக்கின்றனர்.

மறுப்பு :

அறிவியலாளர்களும். விண்வெளி இயற்பியலாளர்களும் மேற்க்கூறப்பட்டுள்ள அத்துணை கருத்துகளுக்கும், "இரத்த நிலா ஒரு இயற்கையான நிகழ்வு தான்" என்று கூறி மறுப்பு தெரிவுத்துள்ளனர்.

உண்மைகள் :

அப்படியாக நாளையும், நாளை மறுநாளும் தோன்ற இருக்கும் இரத்த நிலா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் :

இரத்த நிலா தோன்றுதல் என்பது முதல் முறை ஒன்றுமில்லை, 1900-களில் மொத்தம் 5 முறை இரத்த நிலா தோன்றி உள்ளது என்கிறது நாசா.

நாசா :

அதாவது, 1910, 1928, 1946, 1964 மற்றும் 1982-ஆம் ஆண்டுகளில் இரத்த நிலா தோன்றி உள்ளது என்கிறது நாசா.

அரிது :

பிற ரத்த நிலாக்களுடன் ஒப்பிடும் போது 2015-ஆம் ஆண்டு தோன்ற இருக்கும் ரத்த நிலா, சற்று அரிதான ஒன்றாகும், அதனால் தான் அது 'சூப்பர்மூன்' (Supermoon) என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.

பூமிக்கு நெருக்கம் :

ஏனெனில் செப்டம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி தோன்றும் நிலாவானது பூமிக்கு மிக நெருக்கமாக வருவதோடு முழு நிலவாகவும் மாறும்.

வெளிச்சம் :

அது பார்ப்பவர்கள் கண்களுக்கு நிலா மிகவும் பெரியதாகவும், மிகவும் வெளிச்சமாகவும் காட்சியளிக்கும். அதனால்தான், தற்போது தோன்ற இருக்கும் ரத்த நிலா, 'சூப்பர்மூன்' என்று அழைக்கப்படுகிறது.

மட்டும் தான் :

மேலும் இந்த 'சூப்பர்மூன்' உலகிலுள்ள அத்துணை நாடுகளிலும் தோன்றாதாம். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பியா, மேற்கு ஆசியா, மற்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில் மட்டும்தான் இரத்த நிலா தெரியுமாம்..!

பாதிப்பு இல்லை :

மேலும் சூரிய கிரகணத்தை போல் அல்லாது, இந்த இரத்த நிலாவை காண எந்த விதமான சிறப்பு கண்ணாடிகளும், கண்களுக்கான பாதுகாப்புகளும் அவசியமுில்லை. வெறும் கண்கள் மூலம் இதை பார்க்க முடியும்..!

பெயர் :

இரத்த நிலா என்ற பெயர் பைபிள் மூலம் கிடைக்கப் பெற்ற பெயர் என்ற கருத்துக்கள் நிலவினாலும் அறிவியலாளர்கள் 'ரத்த நிலா' என்பதை அறிவியல் பெயராக ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

லுனார் டெட்ரட் :

மேலும் அறிவியலாளர்கள் இது இயற்கையான ஒரு நிகழ்வு தான். இது 'லுனார் டெட்ரட்' (Lunar Tetred) நிகழ்வின் ஒரு பகுதி என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்..!

கடைசி :

இரண்டு ஆண்டு இடைவெளியில் நான்கு முறை ஏற்படும் சந்திர கிரகணத்தை தான் 'டெட்ராட்' (Tetred) என்கிறார்கள். அப்படியாக தற்போது நடக்கப்போகும் 'சூப்பர்மூன்' நிகழ்வு தான் 'லுனார் டெட்ரட்'டின் நான்காவது மற்றும் கடைசி நிகழ்வாகும்.

முதல் மூன்று :

அப்படியாக முதல் மூன்று டெட்ரட் கிரகணங்கள் ஆனது, ஏப்ரல் 15, 2014 அன்றும், அக்டோபர் 08, 2014 அன்றும், ஏப்ரல் 04, 2015 அன்றும் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கணிப்பு :

அடுத்த 'லுனார் டெட்ரட்' ஆனது 2032-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி அன்று தொடங்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

புரளி :

இதன் மூலம் நாளையும் நாளை மறுநாளும் தோன்ற இருக்கும் ரத்த நிலா, உலக அழிவின் ஆரம்பமும் இல்லை அடித்தளமும் இல்லை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here about Facts About the September 27/ 28, 2015 Blood Moon Eclipse. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்