ஜியோ சிம் விளைவு : அதிக சூடு, பேட்டரி பாழாகிறது.? குற்றசாட்டுகள் உண்மையா.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயனர்கள் சிம் கார்டு மூலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அழைப்புகள் இணைப்பதில் பிரச்சினைகள், சிம் கார்ட் ஆக்டிவேஷன் தாமதம், வேக குறைவு மற்றும் ஒரு சில ஜியோ பிரச்சனைகளின் பழைய பட்டியலில் இப்போது சில புது பொதுவான புகார்கள் கிளம்பியுள்ளன..!

அவை என்ன பிரச்சனைகள், அவைகள் எல்லாம் வெறுமனே உண்டான அனுமானங்களா..? உண்மை நிலை என்ன..?!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

குற்றசாட்டு #01

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இணைய மற்றும் புகார் மன்றங்களில் ஜியோ சிம் கார்டு தங்கள் தொலைபேசியை தேவைக்கும் அதிகமான சூடுக்கு உள்ளாக்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.

வெப்பம் உற்பத்தி :

ஸ்மார்ட்போன் சூடாகுவது என்பது பல மக்கள் கவலைப்படும் ஒரு பொதுவான பிரச்சினை தான் என்றாலும் கூட சில ரிலையன்ஸ் பயனர்கள் அழைப்புகள் மற்றும் ப்ரவுஸிங் செய்யும் போது தங்கள் ஸ்மார்ட்போன் அதிக அளவிலான வெப்பம் உற்பத்தி செய்கிறது என்று பயனர்கள் கூறுகின்றனர்

குற்றசாட்டு #02

மேலும் சில ரிலையன்ஸ் ஜியோ சிம் பயனர்கள் 4ஜி செயல்படுத்தப்படும் போது கணிசமான அளவில் தங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுள் குறைகிறது என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சார்ஜ் :

அதவது அவர்கள் முன்பை விட அடிக்கடி தங்கள் போன் பேட்டரியை சார்ஜ் செய்யம் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன

உண்மை நிலை #01

மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை என்னவென்றால் ரிலையன்ஸ் நெட்வொர்க் மூலம் அளிக்கப்பட்ட உயர் தரவு பரிமாற்ற வேகம் தான் ஸ்மார்ட்போன் சூடாகுவதற்கு காரணம் என்று மக்கள் அனுமானித்து தவறு.

தரவு பரிமாற்றம் :

உண்மையில், வேகமான தரவு பரிமாற்றம் ஆனது உங்கள் தொலைபேசி சூடாக்கவோ அல்லது பேட்டரி ஆயுள் குறைக்கவோ செய்யாது.

உண்மை நிலை #02

அருகாமை டவர்களுக்கு அதிகபட்ச சமிக்ஞை வலிமையை நெட்வெர்க் அளிக்க வேண்டும் இல்லையேல் முழு சிக்னல் திறன் வெளிப்படாது. சில நேரங்களில், சிம் ஆனது அதிக அதிர்வெண்களில் செயல்பட வாய்ப்பு உள்ளது அது தொலைபேசியை சூடாக்கும்.

உண்மை நிலை #03

ஜியோ சிம் பெற, மைஜியோ ஆப்ஸ்களின் தொகுப்பை பதிவிறக்க வேண்டிய கட்டாயத்தில் பயனர்கள் உள்ளனர் . இதன் மூலம் நெட்வொர்க் சர்வர்களில் இருந்து ஆப்ஸ் சார்ந்த நோட்டிபிக்கேஷன்களை பெறும் பொருட்டு பேட்டரி நீடிப்பு ஒரு கணிசமான அளவு குறையும் தான்.

மேலும் படிக்க :

உங்கள் நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்து மாற்றாமல் இருக்க 6 காரணங்களை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Fact about Reliance Jio 4G SIM Overheating and Battery Drain Problems. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்