தற்கொலை முயற்சிகளைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய வழி.!

பேஸ்புக் லைவ் வழியே மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளைத் தடுக்க ஓர் புதிய வழிமுறையினை தனது இணையத்தளத்தில் மேற்கொண்டுள்ளது.

Written By:

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றானதும்,உலகு முழுவதுமாய் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டதுமான முகநூல் நிறுவனம்,இன்றைய சமூகத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும்,அவற்றின் வழியாக பரவிடக்கூடிய கருத்துக்கள் உண்டாக்கிடக் கூடிய அழுத்தத்தினையும் உணர்ந்தே தமது வலைத்தளத்தில் பொழுபோக்கு சார் அம்சங்கள் தவிர்த்து சமூகத்திற்கு பயனளிக்க கூடிய வகையில் தனது வலைத்தளம் வழியே பல முயற்சிகளினை மேற்கொண்டு வருகிறது.

அந்த உயர்ந்த நோக்கின் அடுத்த முயற்சியாக,தனது தற்கொலை முயற்சிகளைத் தடுக்க புது வழிமுறையை கையாண்டுள்ளது.அது என்ன?எப்படி பயன்படுத்துவது?உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் கீழே..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பேஸ்புக்:

இன்றைய இணையம்சார் உலகினில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகப்படியானது.அதேபோல்,அத்தகைய சமூகவலைத்தளங்களில் முன்னணியில் இருப்பதுவும்,உலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டது முகநூல் நிறுவனம்.

சமூகத்தில் ஆதிக்கம்:

உலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருக்கக்கூடிய முகநூல் வழியே பரவிடக்கூடிய கருத்துக்கள் சமூகத்தில் ஓர் குறிப்பிடத்தகுந்த அளவினுக்கு அழுத்தத்தினை உண்டாக்குகின்றன என்றால் அது மிகையில்லை.அதன் காரணமாகவே காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பேஸ்புக்கில் தமக்கான கணக்கு ஒன்றினைத் துவக்கி அதன் வழியே தமது கருத்துக்களை மக்களிடத்தே எளிதாக பரப்பி வருகின்றனர்.

புதிய முயற்சிகள்:

பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர்த்து தமது வாடிக்கையாளர்களுக்கு உதவிடக்கூடிய மற்றும் அவர்கள் பயன்பெறக்கூடிய வகையினில் பேஸ்புக் வழியாகவே வேலைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு முயற்சிகளை தாமாகவே எடுத்தும்,தேர்தலில் வாக்கு சதவிகிதத்தினை உயர்த்திடவேண்டி தேர்தல் நாள் அன்று தமது வலைத்தளத்தில் அதுகுறித்த விழிப்புணர்வினை உண்டாக்கிய வகையிலும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தது பேஸ்புக்.

லைவ் ஸ்ட்ரீம் வழியே:

இந்நிலையில்,கடந்த சனவரி மாதம் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது குழந்தையொன்று தான் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வினை தனது பேஸ்புக் கணக்கின் வழியாக பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பு செய்யும் வகையில் அமைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போனது.

தடுத்திட வேண்டி:

ஆகையால்,பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் வழியான லைவ் வீடியோ அழைப்புகள் போது தனது பயனாளர்களின் தற்கொலை முயச்சிகளினை தடுத்திட வேண்டி புதிய வசதிகளை தனது வலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.இதன் மூலமாக எவரேனும் பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கின் செய்து தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கின்ற போது,அதனைக் காண்கிற எவர் வேண்டுமானாலும் பேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் செய்யலாம்.அதன் மூலம் பேஸ்புக் அவரது நண்பருக்கு தகவல் தெரிவிப்பது,அவசர உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவரினை காப்பற்ற வேண்டிய அத்துணை முயற்சிகளை மேற்கொள்ளும்.

தற்கொலை எண்ணிக்கை அதிகம்:

முன்னதாக அமெரிக்காவில் சமீபத்திய ஆய்வின்படி,24 சதவிகிதம் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.பேஸ்புக்கின் இந்த முயற்சியினை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook Suicide Prevention Tools Get AI Boost, Extended to Live and Messenger.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்