இந்தியாவை புரிந்து கொள்ள மார்க் சூக்கர்பர்க் திடீர் முடிவு..!!

Posted by:

இந்தியா வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் இன்று புது தில்லியில் டவுன்ஹால் நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றார். நேற்று ஆக்ராவில் இருக்கும் தாஜ் மகால் சென்ற மார்க் இன்று இந்திய வாடிக்கையாளர்களின் அனுபவத்தை அறிந்து கொள்ளவே டவுன்ஹால் நிகழ்வில் கலந்து கொள்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் தளத்தினை பயன்படுத்துவதில் இந்திய வாடிக்கையாளர்களை நன்கு புரிந்து கொள்ளும் நோக்கில் அந்நிறுவனம் தனது அலுவலகத்தில் '2ஜி ட்யூஸ்டேஸ்' எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முகநூல்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ப்ராடக்ட் மேனேஜரான க்ரிஸ் மர்ரா தனது முகநூல் பக்கத்தில் '2ஜி ட்யூஸ்டேஸ்' எனும் திட்டம் குறித்த அறிவிப்பை பதிவு செய்துள்ளார்.

2ஜி

அதில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் ஃபேஸ்புக் ஊழியர்கள் 2ஜி வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

சேவை

வளர்ச்சியடைந்த நாடுகளில் 3ஜி மற்றும் 4ஜி எல்டிஈ என வாடிக்கையாளர்கள் வேகமான இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியா

ஆனால் இந்தியாவில் மக்கள் இன்றும் 2ஜி சேவை மூலம் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

வேகம்

ஃபேஸ்புக் அலுவலகத்தில் ஒரு நாள் 2ஜி இண்டர்நெட் வேகத்தில் பணியாற்றும் போது இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் இடையூறுகளை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

மேம்பாடு

இவ்வாறு பிரச்சனைகளை அறிந்து கொண்டால் சிறப்பான சேவையை வழங்க முடியும் என அந்நிறுவனத்தினர் நம்புகின்றனர்.

பாராட்டு

குறைந்த இண்டர்நெட் வேகத்திலும் சிரமம் இன்றி பயன்படுத்தும் நோக்கில் சில மாற்றங்களை ஃபேஸ்புக் ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து

குறைந்த வேகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது தனது பொறுமையை சோதிக்கும் விஷயமாக இருக்கின்றது என அந்நிறுவனத்தின் ஊழியர் தெரிவித்ததாக இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook to start a move to optimize slower 2G connections in India. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்