பேஸ்புக்கின் புதிய ஆப் ரூம்ஸ், நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா இதை

By Meganathan
|

பேஸ்புக் இன்று ரூம்ஸ் என்ற தனது புதிய அப்ளிகேஷனை வெளியிட்டது. சாட்டிங் செய்ய வசதியாக இருக்கும் இந்த அப்ளிகேஷனில் பயனாளிகள் தாங்கள் விரும்பிய பெயர்களை வைத்து கொள்ளலாம். இந்த மொபைல் ஆப் மக்களுக்கு தகவல் பறிமாறி கொள்ள உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கின் புதிய ஆப் ரூம்ஸ், மெய்யாலுமா?

இதில் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிடலாம், மேலும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் அழைக்கலாம். இந்த அப்ளிகேஷனை தங்களுக்கு ஏற்ற விதத்தில் அலங்கரித்தும் கொள்ளலாம். இங்கு குருந்தகவல்கள், படங்கள், வீடியோ என எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

உண்மையான பெயரை பயன்படுத்த வேண்டும் என்ற பேஸ்புக்கின் நீண்ட நாள் கொள்கை இந்த செயளியில் மீறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதிய ரூம்ஸ் செயளியில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய பெயரை வைத்து கொள்ள முடியும். இந்த புதிய ஆப் மூலம் பேஸ்புக் தலைவர் விரும்பிய எண்னம் ஒன்று நிறைவேறியுள்ளது என்றும் கூறலாம், பேஸ்புக் தவிற பல ஆப்களின் தலைமையகமாக மாற்றும் அவரின் திட்டம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் புதிய வரவாக ரூம்ஸ் என ஆரம்பித்துவிட்டது என்பது தான் இப்போதைய நிலைமை, இந்த வரிசையில் மேலும் பல அப்லிகேஷனை எதிர்ப்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Facebook's New App 'Rooms' Lets You Chat in a new way. here you will find the entire specs and details of the new app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X