விண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..!!

Written By:

ஃபேஸ்புக் மற்றும் யூடெல்சாட் நிறுவனங்கள் இணைந்து 2016 ஆம் ஆண்டு விண்வெளியில் செயற்கைகோள் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளன. இந்த செய்தியை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..!!

இந்த செயற்கைகோள் மூலம் 14 நாடுகளுக்கு இண்டர்நெட் வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமயம் கட்டமைப்பு பணிகளில் இருக்கும் அமோஸ்-6 செயற்கைகோளானது 2016 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..!!

விமானம் மற்றும் செயற்கைகோள்களை கொண்டு மக்களுக்கு தடையில்லா இண்டர்நெட் வசதியை வழங்கும் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதோடு தொடர்ந்து ஈடுப்படும் என்றும் மார்க் தனது போஸ்ட் மூலம் குறிப்பிட்டிருக்கின்றார். தற்சமயம் இருக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு ஊரக பகுதிகளில் சீரான இண்டர்நெட் வசதி வழங்குவது சிரமமான விஷயம் என்பதால் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளில் ஃபேஸ்புக் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

விண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..!!

உலகம் முழவதிற்கும் இண்டர்நெட் வசதி வழங்கும் இண்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இதோடு சூரிய சக்தி மூலம் இயங்கும் டிரோன்களை கொண்டு ஊரக பகுதிகளுக்கு இண்டர்நெட் வழங்குவது போன்ற திட்டங்களும் இண்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Facebook plans satellite ‘in 2016'. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்