குறைந்த வேகத்திலும் சீராக இயங்கும் பேஸ்புக் லைட்

By Meganathan
|

நெட்வர்க் இல்லாத இடங்களில் பேஸ்புக் இணைப்பு துண்டிக்கப்படுகின்றதா, இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் என்கின்றது அந்நிறுவனம். நெட்வர்க் கவரேஜ் குறைவாக இருக்கும் இடங்களிலும் பேஸ்புக் தடையின்றி பயன்படுத்த ஏதுவாக புதிய பேஸ்புக் லைட் எனும் புதிய ஆண்ட்ராய்டு செயலி இந்தியாவில் வெளியாகியுள்ளது.

குறைந்த வேகத்திலும் சீராக இயங்கும் பேஸ்புக் லைட்

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலி மொபைல் இணையங்களில் வேகமாக இயங்கும் படி எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நெட்வர்க் இருக்கும் இடங்களிலும் தடையின்றி பேஸ்புக் பயன்படுத்த உதவும் பேஸ்புக் லைட் செயலி தற்சமயம் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி 2ஜி மற்றும் நெட்வர்க் குறைவாக இருக்கும் இடங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த வேகத்திலும் சீராக இயங்கும் பேஸ்புக் லைட்

பெரும்பாலான ஆசிய நாடுகளில் கிடைக்கும் இந்த செயலி விரைவில் லாட்டின் அமெரிக்கா, ஆப்ரிகா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளிலும் வெளியிடப்படும் என்று பேஸ்புக் லைட் செயலியின் ப்ராடக்ட் மேனேஜர் விஜய் சங்கர் தெரிவித்திருக்கின்றார். இந்த நாடுகளில் மக்கள் இன்றும் 2ஜி மற்றும் அதற்கும் குறைவான இண்டர்நெட் வேகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

குறைந்த வேகத்திலும் சீராக இயங்கும் பேஸ்புக் லைட்

இந்த செயலி பாதி அளவிலான மெகாபைட் இம்டர்நெட் பயன்படுத்துவதால் அதிகளவு டேட்டா சேமிக்கப்படுகின்றது, இருந்தும் பேஸ்புக் நியுஸ் ஃபீடு, ஸ்டேட்டஸ் அப்டேட், நோட்டிபிகேஷன் மற்றும் புகைப்படங்களை சப்போர்ட் செயகின்றது, வீடியோ மற்றும் லோகேஷன் போன்ற சேவைகளை பயன்படுத்த முடியாது. இந்த செயலி ஆண்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கும் மேலான இயங்குதளங்களை கொண்டிருக்கும் கருவிகளில் சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி உண்மையான பேஸ்புக் ஆண்ட்ராய்டு ஆப் போன்று காட்சியளிக்கின்றதோடு, வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்கள் லோடு ஆக சில நொடிகள் எடுத்து கொள்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook has finally launched its much talked about Facebook Lite app for Android in India, which will completely solve this problem.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X