நம்ம மார்க்'கும் இந்திய பிரதமரும் போடும் புது 'அரசியல்' பிளான்.!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஆகியோரின் பேஸ்புக்கினை அடித்தளமாகக் கொண்ட அடுத்த திட்டம் குறித்த தகவல்கள்.

Posted by:

இன்றைக்கு சமூகவலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் சமூகத்தில் ஓர் அழுத்தத்தினை உண்டாக்குகிறது என்றால் அது மிகையல்ல.

இவற்றில் முதன்மையானது முகநூல் நிறுவனமேயாகும்.உலகுவாழ் மனிதர்களில் பெரும்பான்மையோர் இதன் பயனாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பேஸ்புக்கினை அடிப்பையாகக்கொண்ட புதிய திட்டம் குறித்தகவல்களைப் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பேஸ்புக்:

உலகு வாழ் மனிதர்களில் பெரும்பான்மையோர் பயன்படுத்துகிற சமூகவலைத்தளங்களில் முதன்மையானது முகநூல் நிறுவனமாகும்.பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய அளவில் அதிகப்படியான வளர்ச்சியைக்கண்டுள்ளது.மேலும் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 800 மில்லியன் உபயோகிப்பாளர்களைக்கொண்ட வலைத்தளமாகும்.

சமூகத் தாக்கம்:

இணைய வளர்ச்சி மற்றும் இத்தகைய சமூகவலைத்தளங்கள் இல்லாத காலங்களில் அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் ஆகியன வழங்குவதே மக்களுக்கு செய்தியாக இருந்தது.அவற்றைத் தவிர்த்து இன்றைய இணைய வளர்ச்சிக்கு பிறகு உலகின் ஏதோ ஓர் முலையில் நடைபெற்ற நிகழ்வினையும் அடுத்த நொடியில் இணையம் வாயிலாக சமூகவலைத்தளங்கள் வாயிலாக முக்கியமா பேஸ்புக் வழிய அறிந்துகொள்ளலாம்.அதற்கான வாய்ப்பினை வழங்குகிறது பேஸ்புக்.

இவற்றில்,பகிரப்படுகிற மற்றும் பதிவிடப்படுகிற கருத்துக்கள் சமூகத்தில் ஓர் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை உண்டாக்குகின்றாள் அது மிகையில்லை.இதன் காரணமாகவே காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும் பேஸ்புக்கில் தமக்கான கணக்கினை துவக்கி அதன் வழி செய்திகளை பரப்புகின்றன.

 

விழிப்புணர்வு:

இம்மாதிரியான செயல்களின் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையம் சிறிது காலத்திற்கு முன்னர் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்த முகநூல் வழியே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வினை பேஸ்புக்கின் உதவியுடன் உண்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்புரை:

இந்நிலையில் தனது கம்யூனிட்டி ஸ்டாண்டர்டு பேஜ் என்கிற முகநூல் பக்கத்தின் வழியாக பேஸ்புக் நிறுவனர் மார்க் இந்தியாவினைப்போன்றே அமெரிக்கா இந்தோனோசியா மற்றும் யூரோப் உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நேரங்களில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் அரசியல் கட்சிகள்,அரசியலாளர்கள் ஆகியோரும் தமது கருத்துக்களை மக்களிடத்தே பகிர்ந்துகொள்ள பேஸ்புக்கினை ஓர் கருவியாக பயன்படுத்திக்கொண்டனர்.மேலும் முகநூலில் யாருக்கு ஆதரவான நிலை இருந்ததோ அவர்களே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கும் அரசுக்குமான:

இந்நிலையில்,பேஸ்புக் வெறுமனே செய்திகளைத்தருவது மற்றும் பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி மக்கள் தங்களது கருத்துக்களை எளிதாக அரசு மற்றும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்துகிறவகையில் மக்களுக்கும் அரசுக்குமான ஓர் இணைப்புக்கருவியாக செயல்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்குறிப்பிட்டுள்ளதனைப் போலவே மக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகளின் பக்கங்கள் துவக்கப்படுவதாகவும் இதன் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி:

பிரதமர் மோடி தனது மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை அரசின் தினசரி செயல்பாடுகளை மக்களுடன் பேஸ்புக் வழியாக பகிர்ந்துகொள்ளவேண்டுமெனவும் மற்றும் மக்களின் கருத்துக்களை அதன் வழியே கேட்க வேண்டுமெனவும் கேட்டுக்கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா,பணமில்லா பரிவர்த்தனை உள்ளிட்ட இணைய வழி செயல்பாடுகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Facebook CEO Mark Zuckerberg Hails PM Narendra Modi For Connecting With Masses Via Facebook.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்