"இது நிர்வாணம் அல்ல, போரின் உக்கிரம்", பணிந்தது பேஸ்புக்...!

Written By:

கடந்த மாதம், நிர்வாணம் சார்ந்த தனது கொள்கைகளை இப்புகைப்படம் மீறுவதாக கோரி புலிட்சர் பரிசு பெற்ற இந்த புகைப்படத்தை எடுத்த அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரரான நிக் உட் அவர்களின் பக்கத்தில் இருந்து இப்புகைப்படம் நீக்கப்பட அதனை தொடர்ந்து நோர்வே மக்கள் போராட்டங்களில் குதித்தனர்.

"இது நிர்வாணம் அல்ல, போரின் உக்கிரம்" பல எதிர்ப்புகள் கிளம்ப, போஸ்ட் செய்யலாம் நீக்கப்படமாட்டாது என்று பணிந்தது பேஸ்புக்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நாபாம் சிறுமி :

வியட்நாம் நாட்டின் நாபாம் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து நிர்வாணமாக ஓடி வரும் வரலாற்று சிறப்புமிக்க 1972-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் 'நாபாம் சிறுமி' என்று அழைக்கப்படும் புகைப்படம்.

மாற்றிக் கொண்டது :

எழுச்சிமிக்க நார்வேயின் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்த உலகின் மாபெரும் சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், படத்தை முகநூலில் இருந்து நீக்குவதற்க்கான அதன் முடிவை மாற்றிக் கொண்டது.

எதிர்ப்பு :

நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் இப்புகைப்படத்தை தனது முகநூல் சுயவிவரத்தில் பதிவிட அதையும் பேஸ்புக் நீக்கியது, அதன் பின்பு போராட்டமும் எதிர்ப்பும் மிக அதிகமாய் கிளம்பியது.

பல விவாதங்கள் :

இந்த வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படத்தில் காமம் சார்ந்த விடயமோ, நிறுவனமோ கிடையாது. இது ஒரு யுத்தத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் புகைப்படம், யுத்தத்தின் நடுவே அப்பாவி மக்கள் தீக்குள் சிக்கி தவிப்பதை அப்பட்டமாய் காட்டும் புகைபடம்" என்ற பல விவாதங்கள் கிளம்ப பேஸ்புக் பணிந்தது.

அறிக்கை :

சமூக பாதுகாப்பு அதே சமயம் சுதந்திரமான கருத்துக்களையும் ஆதரிக்கும் வண்ணம் தான் நாங்கள் எங்களின் கொள்கைகளை மெருகேற்றுகிறோம் என்றும், இந்த (புகைப்படம்) முக்கியமான கேள்விக்கு வெளியீட்டாளர்கள் மற்றும் உலக சமூக உறுப்பினர்ககளோடு ஒற்றுப்போவதாகவும் பேஸ்புக் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook Allows Postings of 'Napalm Girl' Photo After Debate. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்