ரிலையன்ஸ் ஜியோ மீது எகிறும் எதிர்பார்ப்புகள், பீதியில் மற்ற நிறுவனங்கள்.??

Written By:

நாடு முழுவதும் பெறும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவை, சந்தை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு இலவச 4ஜி சேவை, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை அறிவித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையைத் தொடர்ந்து அந்நிறுவனம் சந்திக்க இருக்கும் சில சாதனைப் புள்ளி விவரங்களைச் சந்தை வல்லுநர் ஆய்வு அறிக்கையாக வெளியிட்டுள்ளார் இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மோர்கன் ஸ்டான்லி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி பிரீவியூ சேவைக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அந்நிறுவனம் சுமார் 40 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று 2019-2020 வாக்கில் சுமார் 200 கோடி டாலர் மதிப்பிலான வருவாயை ஈட்டும் என வணிக வங்கியாளர் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

இது குறித்து மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வு அறிக்கையில் வெளியான தகவலில் 2017-18 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் $2 பில்லயன் வரை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பங்கு

இதில் வாய்ஸ் கால் சேவையில் சுமார் 2 சதவீதம், டேட்டா பயன்பாடுகளில் 19 சதவீதம் என ஒட்டு மொத்த சந்தையில் சுமார் 6 சதவீதம் பங்குகளை பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிப்பு

2017-2018 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 40 மில்லியன் என்றளவில் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலம்

ஸ்பெக்டரம் ஏல மதிப்பு $1.5 பில்லியன் வரை இருக்கும் என்ற கணக்கில் ரிலையன்ஸ் ஜியோ திட்ட மதிப்பு சுமார் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படாத நிலையில் சோதனை ஓட்டத்திலேயே அந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருவதோடு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அச்சம்

இதன் விளைவுகளாக பல்வேறு நிறுவனங்களும் பழைய கட்டணத்தில் கூடுதல் டேட்டா சேவைகளை வழங்கி வருகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Experts expect Reliance Jio to reach 40 million subscribers Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்