ஜியோவின் தண் தணா தண் ஆபருக்கு டண்டணக்கா டண்டணக்கா.!?

"இங்குதான்" சம்மர் சர்ப்ரைஸ் போலவே தண் தணா தண் ஆபரும் திரும்ப பெறப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.

|

முதலில் மார்ச் மாதத்தோடு இலவசங்கள் முடியும் என்று அறிவித்த முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மேலும் அதன் இலவச சலுகைகளை சம்மர் சர்பரைஸ் என்ற புதிய பெயரின் கீழ் அறிவித்த வேகத்தில் ட்ராய் தலையிட்டு உடனே அதை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டது.

உடனே ஜியோ அதன் தண் தணா தண் ஆபரை அறிவித்தது. இப்போது தண் தணா தண் சலுகைகளுக்கு சிக்கல் ஏற்ப்படும் என்பது போல் தெரிகிறது.

தேவைப்பட்டால் மட்டுமே

தேவைப்பட்டால் மட்டுமே

அதாவது ஜியோவின் சமீபத்திய கட்டணத் திட்டமான தண் தணா தண் சலுகையானது, டெலிகாம் ரெகுலேட்டர் மூலம் மதிப்பாய்வுரை செய்யப்படவுள்ளது. இதில் நிறுவனத்தின் நிர்வாகிகள் விளக்கமளிக்கலாம், ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே என்று டெலிகாம் ரெகுலேட்டரின் ஒரு மூத்த அதிகாரி நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில்

பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில்

"ஜியோ நிறுவனம் அதன் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அவர்களின் புதிய கட்டண திட்டங்களி சமர்ப்பித்துள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், தேவைப்பட்டால் நாங்கள் ஜியோ நிறுவனத்தின் விளக்கத்தையும் கேட்போம்" என்று ட்ராய் செயலாளர் சுதிர் குப்தா கூறியுள்ளார்.

விவரங்களையும் முறையாக சமர்ப்பித்தது

விவரங்களையும் முறையாக சமர்ப்பித்தது

ஏப்ரல் 11-ஆம் தேதி ஜியோ தனது சமீபத்திய ஜியோ தண் தணா தண் வாய்ப்பின் கீழ் நான்காவது தலைமுறை (4ஜி) டெல்கோவை வெளியிட்டது. பின்னர் சலுகையின் அடிப்படையில், தொலைத் தொடர்பு கண்காணிப்புக்கு அதன் விவரங்களையும் முறையாக சமர்ப்பித்தது.

பாகுபாடு மற்றும் வேட்டையாடும் தன்மை

பாகுபாடு மற்றும் வேட்டையாடும் தன்மை

1999 ஆம் ஆண்டின் டெலிகாம் கட்டண அறிவிப்பு (டிஓஓ) திருத்தத்தின் படி, ஏழு நாட்களுக்குள் தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும், அனைத்து அம்சங்களிலும் தொடர்புடைய ஒழுங்குமுறை கோட்பாடுகளுக்கு இசைவானதாக இருந்தால், ஐயூசி இணக்கத்தன்மையை உள்ளடக்கியதாக இருந்தால், பாகுபாடு மற்றும் வேட்டையாடும் தன்மை அல்லாத திட்டங்களாய் இருந்தால் அவைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தணா தண் ஆபரும் திரும்ப பெறப்படுமா.?

தணா தண் ஆபரும் திரும்ப பெறப்படுமா.?

"புதிய திட்டத்தில் கட்டுப்பாட்டு மேலாளர்கள் எந்தவித மீறலும் காணவில்லை என்றால், அதை எங்கள் பதிவுக்கு பதிவு செய்வோம், மேலும் நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இருக்காது" என்றும் குப்தா கூறியுள்ளார். இங்குதான், சம்மர் சர்ப்ரைஸ் போலவே தண் தணா தண் ஆபரும் திரும்ப பெறப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.

திடீரென்று ஜியோவிற்கு எதிராக

திடீரென்று ஜியோவிற்கு எதிராக

சமீபத்தில் ட்ராய் ஜியோ நிறுவனத்திற்கு ஏற்ற வண்ணம் பல சலுகைகளை வழங்கியது என்ற தகவல்கள் வெளியானதில் இருந்து ட்ராய் திடீரென்று ஜியோவிற்கு எதிராக செயல்படும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னணி

பின்னணி

அப்படி ட்ராய், ஜியோவிற்கு பின்னணியில் செய்த உதவிகள் என்னென்ன.?

Best Mobiles in India

Read more about:
English summary
Examining Reliance Jio Dhan Dhana Dhan offer: Telecom regulator. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X