அன்றாடம் நடக்கும் 7 விசித்திரங்கள்..!

Written By:

விண்வெளிக்கு போனால் மிதப்போம், காற்றில் பறப்போம் என்பது மட்டும் தான் நம்மில் பலருக்கும் உள்ள விண்வெளி பற்றிய பொதுவான அறிவு. அது மட்டுமில்லை உலகில் நடக்கும் அதே விடயம் விண்வெளியில் வேறு மாதிரி விசித்திரமாக நடக்கும். அது பற்றிய தெளிவு ஏதாவது இருக்கிறதா உங்களிடம்..?

தினந்தோறும் விண்வெளியில் நடக்கும் 7 விசித்திரங்களை தான் கீழ்வரும் ஸ்லை டார்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

குமிழ்கள் :


பூமியில் நீரை கொதிக்க வைத்தால் ஆயிரம் ஆயிரம் குமிழ்கள் ஏற்படும், ஆனால் விண்வெளியில் நீரை கொதிக்க வைத்தால் ஒரே ஒரு பெரிய குமிழ் தொடரலையின் மூலமாக ஏற்படும்.

காரணம் :

வெப்பச்சலனம் மற்றும் மிதப்பு இல்லாத ஒரு நிலைதான் விண்வெளியில் அம்மாதிரியான ஒரு கொதியை ஏற்படுத்துகிறது.

மெழுகு :

பூமியில் மெழுகு மேல் ஓங்கி எரியும் ஆனால் விண்வெளியில் வட்ட வடிவில் எரியும்.

காரணம் :

உலகின் சூடான வாயு மூலக்கூறுகள் மெழுகை உயர்த்தி ஏறிய வைக்கிறது மற்றும் விண்வெளியில் நிலவும் குளிர்ச்சியான வாயு மூலக்கூறுகள் தான் மெழுகை வட்ட வடிவில் ஏறிய வைக்கிறது.

வளர்ச்சி :

பாக்டீரியாக்கள், பூமியில் வளர்வதை விட மிக மோசமாக விண்வெளியில் வளரும்.

காரணம் :

பூமியில் இருக்கும் வாய்ப்பை விட விண்வெளியில் பாக்டீரியாக்கள் வளர 3 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதே இதற்கு காரணமாகும்.

பொங்காது :

சோடா அல்லது பீயர்கள் பூமியில் பொங்கி வெளியேறுவது போல் விண்வெளியில் பொங்காது.

காரணம் :

ஈர்ப்பு விசை இல்லையெனில் மிதப்பு விசையும் இல்லை ஆகையால் விண்வெளியில் வாயுக்குமிழ்கள் மேல் எழும்பி பொங்க வாய்ப்பு இல்லை.

மணம் :

பூமியில் ஒரு வகையான மணம் தரும் ரோஜாப்பூ, விண்வெளியில் வேறொரு மணம் தரும்.

காரணம் :

விண்வெளியில் மலர்கள் பல்வேறு வாசனை சேர்மங்களை தயாரிக்கின்றன. அது தான் வித்தியாசமான மணத்திற்கு காரணம்.

வேர்வை :

விண்வெளியிலும் வேர்வை ஏற்படும் ஆனால் பூமியில் நிகழ்வது போல் வடியாது, ஒழுகாது முகத்திலேயே உப்பு தண்ணீர் படலம் ஒன்றை உருவாக்கி விடும்.

காரணம் :

இயற்கை வெப்பச்சலனம் இல்லாத காரணத்தால் தான் இது நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்கள் :

பூமியில் இருக்கும் மனிதர்களோடு ஒப்பிடும் போது விண்வெளியில் இருக்கும் மனிதர்களின் கண்கள் சற்று அழுததப்பட்டு சுருக்கமாக இருக்கும், மேலும் பார்வை மங்கலாக தெரியும்.

காரணம் :

விண்வெளியில் நிலவும் எடையற்ற நிலையே இந்த கண் சுருக்கத்திற்கு காரணமாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
அன்றாடம் விண்வெளியில் நடக்கும் 7 விசித்திரங்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்