ஜியோ ஆன்லைன் டெலிவரி மக்களை ஏமாற்றும் திட்டம்!

இலவசமாகக் கிடைத்தாலும், அதனைக் குறுக்கு வழியில் வாங்கினால் பிரச்சனை அதனை வாங்குபவர்களுக்குத் தான் என்பதை உறுதி செய்யும் ஜியோ டோர் டெலிவரி சேவை.

By Meganathan
|

நல்ல சலுகைகள் என்றால் அதிகளவு வரவேற்பு தானாகக் கிடைத்து விடும், அதுவும் அவை இலவசம் என்றால் எவ்வித விளம்பரங்கள் இல்லாமலே அதிகப் பிரபலமாகிவிடும். ஆனால் இதுபோல் கிடைக்கும் சேவைகள் தீய காரியங்களையும் வழி செய்யக் கூடும்.

ரிலையன்ஸ் ஜியோ தனது வெல்கம் ஆஃபர் மூலம் இந்திய பயனர்களை ஈர்த்திருக்கும் வேலையில் இந்தச் சேவையினை ஹேக்கர்கள் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இலவசமாகக் கிடைக்கும் ரிலையனஸ் ஜியோ சேவைகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது என்றாலும், இவற்றை வாங்கப் பயனர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. இதன் காரணமாகக் காத்திருக்க முடியாதவர்கள் குறுக்கு வழிகளைத் தேர்வு செய்து விடுகின்றனர்.

விற்பனை

விற்பனை

ரிலையன்ஸ் ஸ்டோர்களில் மட்டும் இலவசமாகக் கிடைக்கும் ஜியோ சிம் கார்டுகள் மற்ற கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை ரூ.200 முதல் ரூ.500 வரை கிடைக்கின்றது.

இணையம்

இணையம்

விற்பனை நிலையங்கள் தவிர ஆன்லைனில் ஜியோ சிம் கட்டண அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன் படி பயனர்கள் ஜியோ சிம் கார்டுகளை ரூ.200 செலுத்தி டோர் டெலிவரி முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.

இஸ்கேன்

இஸ்கேன்

ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனங்களான eScan, an anti-virus போன்றவை ஜியோ சிம்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் aonebiz.in தளம் மக்களுக்குக் கெடுதலை விளைவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தகவல் திருட்டு

தகவல் திருட்டு

அதிகத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் ஜியோ சிம்களை ஆன்லைனில் விற்பனை செய்து பொது மக்களின் தகவல்களைத் தவறான காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம் எனச் சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இது போன்ற தளங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வம் கொண்டவை இல்லை என்பதால் இச்சேவைகளைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்றே ஆகும். இங்குச் சிம்களை வாங்குவோர் வழங்கும் அடையாளச் சான்றுகளை இந்தத் தளத்தினர் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.

அறிவிப்பு

அறிவிப்பு

சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் பயனர்கள் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

Best Mobiles in India

English summary
eScan warns users about Reliance Jio SIM card scam

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X