இண்டர்நெட் பயன்பாடு : ஆபத்தில் சிக்காமல் இருக்க உடனடியாக செய்ய வேண்டியவை.!!

Written by: Aruna Saravanan

நம்மில் பலர் பல மணி நேரம் இண்டர்நெட்டில் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். பெரும்பாலானோர் இண்டர்நெட் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருதின்றனர். இண்டர்நெட்டில் பல விஷயங்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதால் அதில் நேரம் போவதே தெரிவதில்லை. பலர் பிரவுசிங் இன் போது பல்வேறு தவறுகளை மேற்கொள்கின்றனர். அவை குறித்து விரிவாக ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அப்கிரேட்

உங்கள் பிரவுஸரை அப்கிரேட் செய்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். புதிய அம்சங்களை பெறுவது மற்றும் பழைய பிரச்சனைகளை தீர்க்க என அப்கிரேடு செய்வது இரு விதங்களில் பயனுள்ளதாக இருக்கின்றது. இதனால் சமீபத்திய வர்ஷனை அப்கிரேட் செய்து கொள்வது மிகவும் நல்லது.

குக்கீஸ்

நீங்கள் பார்க்கும் சைட்களின் மூலம் பல குக்கீஸ்கள் உங்கள் வழியில் வரும். அவற்றை தேவையான போது அனுமதிக்கலாம். சில நேரங்களில் நீங்கள் அவற்றை அனுமதிக்காமல் விட்டு விட்டால் அந்த சைட்களை பார்வை இட முடியாது.

தவறு

எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது. உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்குகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இண்டர்நெட்டில் பாதுகாப்பாக இருப்பது பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்கும்.

Extensions

அதிக plugin அல்லது extensions நிறுவுவதால் நன்மை என்றாலும் சில பிரச்சனைகள் வருவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. பல டேப்களை திறந்து வைப்பது எப்பொழுதும் பிரச்சனைதான். ஆகையால் தேவையற்றதை நிறுவுவதை நிறுத்தினாலே இண்டர்நெட் பயன்பாடு நன்றாக இருக்கும்.

இண்டர்நெட் செக்யூரிட்டி

இண்டர்நெட் அனுபவத்தை சிறப்பாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்கள் பேருதவியாக இருக்கும். முடிந்த வரை இண்டர்நெட் பயன்படுத்தும் கருவியில் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் பயன்படுத்தலாம்.

இன்காங்நிட்டோ

வெளியிடங்களில் அவசர தேவைக்கென வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது பிரவுஸரில் இன்காங்நிட்டோ மோடு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் பயன்படுத்தியதற்கு எவ்வித தடயமும் அந்த கணினியில் இருக்காது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Easy Tips for safe and secure browsing, Easy tips in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்