4.5 பில்லியன் ஆண்டுகளாய் 'புதையுண்டு கிடந்த' பூமி கிரக ரகசியம்.!

Written By:

பூமி கிரகத்தில் வாழும் மக்களுக்கு, தான் வாழும் கிரகம் சார்ந்த செய்திகளிலேயே - இது தான் 'பிக் நியூஸ்' எனலாம். பூமி கிரகம் உருவாகி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், ஒரு கிரக கரு (ப்ளானிடரி எம்ப்ரொ) ஆனது பூமியோடு மோதல் நிகழ்த்தியது என்பது மட்டும்தான் விண்வெளி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

அதை மேலும் ஆழமாக ஆராய்ந்து பார்த்த போதுதான் பூமி கிரகம் சார்ந்த இந்த 'பிக் நியூஸ்' கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கிரக கரு :

தியே (Theia) என்பது ஒரு கிரக கரு, அதாவது ஒரு ப்ளானிடரி எம்ப்ரொ (planetary embryo) ஆகும்.

மோதல் :

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த 'தியே' கிரக கருவானது, பூமி கிரகத்தோடு மிகவும் மோசமான ஒரு மோதலை நிகழ்த்தியது (பூமி கிரகம் உருவாகி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில்)

ஆய்வுகள் :

இந்த மோதல் நிகழ்வு குறித்து கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகம் தலைமையில் மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு மிகவும் சுவாரசியமான விடயம் ஒன்று கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

தாக்கம் :

தியே கிரக கரு மோதல் தாக்கமானது தியே மற்றும் பூமி கிரகம் ஆகிய இரண்டையும் ஒரே கிரகமாக உருவாக்கியுள்ளது. அதாவது, பூமி கிரகமானது உண்மையில் இரண்டு கிரகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

துண்டு :

இந்த மோதலின் போது சிதறி, புவியீர்ப்பு விசைக்குள் நுழைந்த ஒரு துண்டு தான் தற்போது நிலவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறுதி :

அமெரிக்காவின் அப்போலோ மிஷன்களில் கிடைக்கப்பெற்ற நிலவு பாறைகளுடன், பூமி கிரக்தில் (ஹவாய் மற்றும் அரிசோனா) கிடைக்கப்பெற்ற பாறைகளோடு ஒப்பிடுகையில், பூமி இரண்டு கிரகங்களால் உருவானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனி கிரகம் :

மேலும் தியே கிரக கருவானது, இந்த மோதல் சம்பவத்தில் இருந்து தப்பித்து இருந்தால், அது நான்கு வளர்ந்த ஒரு தனி கிரகமாக உருவாகி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீர் ஆதாரம் :நீர் ஆதாரம் :

மேலும் இந்த மோதல் நிகழ்ந்த போது பூமி கிரகத்தில் இருந்த அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் அழிந்து போனது என்பதும், பின்னர் நீர் ஆதாரம் நிறைந்த குறுங்கோள்கள் பூமியோடு மோதல்கள் நிகழ்த்த நிகழ்த்த பூமியில் நீர் ஆதாரம் பெருகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

சூரிய புயல் தாக்கினால் இதுதான் உலகின் கதி..!?


பிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதையின் மர்மங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Earth is actually made up of two planets. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்