தலைக்கு மேலே தொங்கும் சாபம்..!

Posted by:

எப்போது முதல் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதோ அப்போதில் இருந்தே உலக நாடுகள், விண்வெளியானது உயர் நிலையான ஒரு தரை என்பதையும், அங்கு பலம் கூட்டினால் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாய் ஆகி விடலாம் என்பதையும் புரிந்து கொண்டன என்பதே நிதர்சனம்.

சீனாவின் விண்வெளி ஆயுதங்கள் : அதிர்ச்சியில் அமெரிக்கா..!!

அப்படியாக, விண்வெளி ராணுவமயமாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பதை நிரூபிக்கும் திட்டங்களும் செயல்பாடுகளும் அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!

சூப்பர் பவர் நாடுகளும், சூப்பர் பவர் நாடுகளாக ஆக துடிக்கும் நாடுகளும் ஏனைய தொழில்நுட்ப வளர்ச்சிகளை காட்டிலும் அல்ட்ரா-டெக் ஆயுதங்கள் மூலம் விண்வெளியை ஆள வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் கொள்கின்றன. ஏனெனில், பல உலக நாடுகளுக்கும் எதிர்காலம் என்று யோசித்த உடன் முதலில் நினைவிற்கு வருவது யுத்தம் தான்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

போட்டி :

இரண்டாம் உலகப்போர் போர், பனிப்போர் காலத்தில் இருந்தே உலக நாடுகளுக்குள் விண்வெளி ஆட்சியை பிடிக்கும் போட்டி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

முயற்சிகள் :

அந்த போட்டியில் விண்வெளி ராணுவ மயமாக்கத்திற்காக பல முயற்சிகள் நடைப்பெற்றன அப்படியான முயற்சிகளில் சபிக்கப்பட்ட, மிகவும் மோசமான திட்டங்களை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

மோல் (MOL) :

விண்வெளியில் இருந்து ராணுவம் சார்பாக கண்காணிக்க திட்டமிட்டு அமெரிக்க விமானப்படையால் 1960-களில் உருவாக்கப்பட்டது தான் மோல். சர்ச்சைக்கு பின் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ராஜக்ட் அல்மாஸ் (Project Almaz) :

பனிப்போரின் உச்சக்கட்டத்தில் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட இதன் நோக்கமும் விண்வெளியில் இருந்து ராணுவம் சார்பாக கண்காணித்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயஸ் பிபிகே (Soyuz PPK) :

ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இது ஒரு போர் விண்கலம் ஆகும், அதாவது மனிதர்களை உள்ளடக்கிய விண்வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும் போர் விண்கலம் ஆகும்.

போப்ஸ் (FOBS)

இதுவும் பனிப்போரின் போது உருவானதே ஆகும். எதிர் திசையில் இருந்து தாக்கும் ஏவுகணை மீது அமெரிக்காவிற்கு இருக்கும் பலவீனத்தை மனத்தில் கொண்டு சோவியத் ஒன்றியத்தால் இது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லுனக்ஸ் ப்ராஜக்ட் (Lunax Project) :

அமெரிக்காவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான நிலவில் ராணுவத்தளம் அமைக்கும் திட்டம் தான் லுனக்ஸ் ப்ராஜக்ட்.

புரன் ஷட்டுள் (Buran Shuttle) :

அமெரிக்க ஸ்பேஸ் ஷட்டுள் எப்போது வேண்டுமானாலும் சோவியத் பிரதேசங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலையில் சோவியித் ஒன்றியம் வடிவமைத்து விண்ணில் ஏவியதே இந்த புரன் ஷட்டுள்.

ப்ரோகிராம் 437 (Program 437) :

ஏவுகணைகளை அனுப்பி விண்வெளியில் உள்ள எதிரிகளின் செயற்கைகோள்களை அழிக்கும் அமெரிக்காவின் திட்டம் தான் - ப்ரோகிராம் 437.

டய்னா-ஸோர் (Dyna-Soar) :

பல வகையான ராணுவ பயன்களை உள்ளடக்கிய விண்கலமான டய்னா-ஸோர், 1958-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் க்ரூஸர் (Space Cruiser) :

என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே எதிரிகளின் உலவு பார்க்கும் செயற்கைகோள்களை அழிக்கும் வல்லமை பெற்ற அமெரிக்காவின் ஸ்பேஸ் க்ரூஸர்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
ராணுவ மயமாக்கப்பட்ட விண்வெளி. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்