ஃப்ரீடம் 251 பாணியில் முளைத்த புதிய நிறுவனம்.!!

Written By:

உலக ஸ்மார்ட்போன் சந்தையையே திரும்பி பார்க்க வைத்த ஃப்ரீடம் 251 போன்று மற்றொரும் ஓர் புதிய நிறுவனம் தற்சமயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரூ.1000க்குள் ஸ்மார்ட்போன் கருவிகளை வழங்குவதாக ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான டோகோஸ் தெரிவித்துள்ளது.

அதன் படி ரூ.888 விலையில் டோகோஸ் எக்ஸ்1 கருவிகளை மே மாதம் 2 ஆம் தேதி முதல் விநியோகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு இதற்கான முன்பதிவுகள் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஃப்ரீடம் 251

முன்னதாக ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ரூ.251க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு முன்பதிவுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கருவிகள் மே அல்லது ஜூன் மாதம் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஃப்ரீடம் 251 மற்றும் டோகோஸ் எக்ஸ்1 கருவியின் சிறப்பம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் ஏதும் இல்லை என்றே கூற வேண்டும்.

ஃப்ரீடம் 251

ஃப்ரீடம் 251 கருவியில் 4.0 இன்ச் ஐபிஎஸ் திரை,960*540 ரெசல்யூஷன், 1 ஜிபி ரேம், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 3 எம்பி / 0.3 எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், சிங்கிள் சிம், 1450 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

டோகோஸ் எக்ஸ்1

டோகோஸ் எக்ஸ்1 கருவியில் 4.0 இன்ச் ஐபிஎஸ் திரை, 800*480 ரெசல்யூஷன், 1 ஜிபி ரேம், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, 2 எம்பி / 0.3 எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளம், டூயல் சிம், 1300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

வெளியீடு

இத்தனை குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் கருவிகளை விற்பனை செய்வது மிகவும் கடினமான ஒன்று என ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த கருவிகளின் தரம் கருவி வெளியானது வெளிச்சத்திற்கு வந்து விடும்.

மேலும் படிக்க

மக்கள் கையில் அரசு சேவைகள் : வாய் பிளக்க வைக்கும் ஒற்றை செயலி.!!

அழகிய போட்டோ எடுக்க தலை சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Docoss X1 an other Freedom 251 like Smartphone at Rs. 888 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்