பிரபல 'லோகோ'க்களுக்குள் ஒளிந்திருக்கும் 'மறைபொருள்' ரகசியங்கள்..!

விக்கிப்பீடியா தொடங்கி அமேசான், எல்ஜி, டெல், சிஸ்கோ, பிக்காசா என பல பிரபல லோகோக்களுக்கு உள்ளே மறைந்து கிடக்கும் ரகசிய அர்த்தங்கள் என்னென்ன.?

|

நமக்கு மிகவும் தெரிந்த, நாம் தினமும் பார்க்கக்கூடிய பல பிரபலமான நிறுவனங்களின் ஒவ்வொரு 'லோகோ'க்களுக்கு உள்ளேயும் ஒரு மறைமுகமான, வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ள அர்த்தங்கள் உள்ளன என்று கூறினால் நம்புவீர்களா..?? நம்பித்தான் ஆக வேண்டும்.

அப்படியாக, விக்கிப்பீடியா தொடங்கி அமேசான், எல்ஜி, டெல், சிஸ்கோ, பிக்காசா என பல பிரபல லோகோக்களுக்கு உள்ளே மறைந்து கிடக்கும் ரகசிய அர்த்தங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

விக்கிபீடியா :

விக்கிபீடியா :

முழுமையற்ற தன்மையை கொண்ட இயற்கையை போலவே தான் விக்கிபீடியாவும் தினந்தினம் வளர்ச்சி அடைகிறது என்ற செய்தியை ஒளித்து வைத்திருக்கிறது இந்த விக்கிபீடியா 'முழுமை அடையாத உலக உருண்டை' லோகோ..!

மேக்ரூமர்ஸ் :

மேக்ரூமர்ஸ் :

'மேக்' சார்ந்த புரளிகளை கிளப்பும் இந்த பிரபல ஆப்பிள் லோகோவை உற்றுப்பார்த்தால் லோகோவின் வலது பக்கத்தில் கேள்விக்குறி ஒன்றை காணமுடியும்..!

டெல் :

டெல் :

இந்த டெல் லோகோவில் எழுத்து 'இ' சாய்ந்திருக்க காரணம் உலகின் காதுகளை தன் பக்கம் சாய்க்க வேண்டும் என்ற உள்அர்த்தம் கொண்டிருப்பதால் தான்..!

சிஸ்கோ :

சிஸ்கோ :

சிஸ்கோ லோகோவில் மேலே இருக்கும் செங்குத்து கோடுகள் சாண்ப்ரிஸ்கோ கோல்டன் கேட் பாலம்தனை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.

சன் மைக்ரோ சிஸ்டம் :

சன் மைக்ரோ சிஸ்டம் :

சன் மைக்ரோ சிஸ்டம் லோகோவானத்து எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் 'சன்' என்ற வார்த்தையை பிரதிபலிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வியோ :

வியோ :

இந்த லோகோவில் 'வி' மற்றும் 'ஏ' ஏன்ற முதல் இரண்டு எழுத்தும் அனாலாக் சிக்னலை குறிக்கிறது. அடுத்து வரும் 'ஐ' மற்றும் 'ஓ' என்ற எழுத்துக்கள் டிஜிட்டல் பைனரி கோட் தனை குறிக்கிறது.

பிக்காசா :

பிக்காசா :

பிக்காசா லோகோவானது கேமிரா ஷாட்டர்தனை குறிக்கிறது.

எக்ஸ்என்ஏ :

எக்ஸ்என்ஏ :

மைக்ரோசாப்ட்டின் கேம் டெவலப்பர் ஆன எக்ஸ்என்ஏ லோகோவில் இருக்கும் எக்ஸ் ஆனது எக்ஸ்என்ஏ என்பதின் மோர்ஸ் கோட் (Morse Code) ஆகும்.

நின்டென்டோ கேம்க்யூப் :

நின்டென்டோ கேம்க்யூப் :

நின்டென்டோ கேம் க்யூப் லோகோவை நான்கு உற்றுப்பார்த்தால் அதனுள் 'ஜி' மற்றும் 'சி' என்ற எழுத்துகள் ஒளிந்திருக்கும்.

எல்ஜி :

எல்ஜி :

எல்ஜி லோகோவானது சிரித்த முகத்தோடு அனைவரையும் வரவேற்கிறோம் என்ற உள் அர்த்தத்தை கொண்டது.

அமேசான் :

அமேசான் :

அமேசான் லோகோவில் இருக்கும் மஞ்சள் நிற அம்புக்குறி யானது ஒரு ஸ்மைலி என்பது மட்டுமின்றி அந்த குறியானது 'ஏ' முதல் 'ஸெட்' வரை செல்வதையும் காணலாம். அதாவது உங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கே கிடைக்கும் என்ற பொருள்படும்.

ஃபெட்எக்ஸ் :

ஃபெட்எக்ஸ் :

ஃபெட்எக்ஸ் லோகோவை உற்றுப்பார்த்தால் 'இ' மற்றும் 'எக்ஸ்' என்ற இரண்டு எழுத்துக்குள் ஒரு மறைந்த நிலை அம்புக்குறியை கொண்டுள்ளத்தை காணமுடியும்.

கோட் பிஷ் :

கோட் பிஷ் :

ஐடி நிறுவனத்தின் இந்த லோகோ அடிக்கடி பயன்படுத்தப்படும் ப்ரோகிராமிங் கேரக்டர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

Best Mobiles in India

Read more about:
English summary
Do you ever find these hidden meanings of famous logos. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X