சரவெடி அதிரடி சலுகைகள் : ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல்.!

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் தங்களது அதிரடியான 4ஜி சலுகைகளை வெளியிட்டுள்ளன.

Written By:

பண்டிகைக் காலத்தில் அனைத்து வகையான பொருட்களுக்கும் ஒரு பரவலான தள்ளுபடி கழிவுகளை நிறைய எதிர்பார்க்கலாம் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சில உபகரணங்களை குறிப்பிடலாம். அதற்கு அடுத்தபடியாக நாம் அதிக சலுகைகளை எதிர்பார்ப்பது தோலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து தான்.

அப்படியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா செல்லுலார், பிஎஸ்என்எல் மற்றும் வோடாபோன் போன்ற சேவை வழங்குநர்களின் சிறந்த 4ஜி திட்டங்கள் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு டிசம்பர் 2017 வரை வெல்கம் ஆஃபர் வழங்கி வருகிறது. குறிப்பாக லைஃப் போன் பயனர்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை வெல்கம் ஆஃபர் பெற முடியும். இந்த சலுகை லைஃப் ப்ளேம் 7எஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்

ஏர்டெல் சமீபத்தில் ஒரு அற்புதமான வாய்ப்பை அதன் பயனர்களுக்கு அறிவித்தது. சேவை வழங்குநர் வெறும் 1 ஜிபி விலையில் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கியது அதாவது வெறும் ரூ.259/-க்கு இந்த வாய்ப்பை பயனர்கள் எந்த விதமான கூடுதல் கட்டணம் செலுத்தாமல் சேவையை அனுபவிக்க முடியும்.

வோடாபோன்

வோடபோன் அதிகாரப்பூர்வநேஷனல் இலவச ரோமிங் உள்வரும் அழைப்புகளை மேற்கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் நிகழும் போட்டி காரணமாக இப்படியான ஒரு வாய்ப்பை சரியாக தீபாவளி நெருங்கும் சமயத்தில் அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் தனது தீபாவளி போனான்ஸா சலுகையின் ஒரு பகுதியாக 10% கூடுதல் டாக்டைம் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் சேவையின் பயனர்கள் செய்கிற ஒவ்வொரு ரீசார்ஜ்க்கும் 10% கூடுதல் டாக்டைம் அத்துடன் தரவும் கிடைக்கும்.

ஐடியா

ஐடியா செல்லுலார் வெறும் ரூ.1/-க்கு தனது பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி தரவை வழங்குகிறது எனினும், இந்த சலுகையில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது சேவை வழங்குநரின் இந்த வாய்ப்பை 1 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Diwali Offers for 4G Users from Reliance Jio, Airtel, Idea, Vodafone and BSNL. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்