பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..!

Written By:

விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான், பூமி கிரக்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..!

அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பூமியின் நீர் ஆதாரம் சார்ந்த அறிய கண்டுப்பிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நிலத்தடி கடல் :

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமி கிரகத்தின் மேல்பரப்பு மற்றும் உட்கருவம் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் பரந்த அளவிலான நிலத்தடி கடல்பகுதி இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.

3 மடங்கு :

அதாவது பூமிக்கு அடியில், பூமியின் மேற்ப்பரப்பில் இருப்பதை விட 3 மடங்கு அதிக அளவிலான கடல் நீர் இருப்பு உள்ளதாம்.

ரிங்வுடைட் :

மேலும் கண்டுப்பிடிக்கப்பட்ட கடல் நீர் ஆனது ரிங்வுடைட் (ringwoodite) என்ற கணிமத்தின் உள்ளே சிக்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தலைமை பொறுப்பு :

இந்த கண்டுப்பிடிப்பிற்கு தலைமை பொறுப்பு வகித்தது - நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தை (Northwestern University) சேர்ந்த ஸ்டீவன் ஜேகப்சன் மற்றும் நியூ மெக்ஸிக்கோ பல்கலைகழகத்தை சேர்ந்த பிரான்டன் சமண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லியன் ஆண்டு :

இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் கடல்கள் எவ்வாறு உருவாக்கம் பெற்றன, பில்லியன் ஆண்டுகளாக கடல்கள் எவ்வாறு பரந்த அளவை பாராமரிக்கின்றன போன்ற விடயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பனிக்கட்டி வால்மீன்கள் :

பெரும்பாலான புவியியலாளர்கள் நீர் ஆனது விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான் உருவாகியது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

பூமியின் ஆழத்தில் இருந்து :

ஆனால், சமீபத்திய கண்டுப்பிடிப்பானது நீர் ஆதாரமானது படிப்படியாக பூமியின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டது என்பதை பரிசிலிக்கிறது.

அதிர்வலைகள் :

பூகம்ப அதிர்வு அலைகளை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் போது, அதிர்வலைகள் பாறைகளில் ஊடுறுவதை விட தண்ணீரில் வெவ்வேறு வேகத்தில் ஊடுருவி செல்வதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஜர்னல் சயின்ஸ் :

இது குறித்த ஆய்வானது ஜர்னல் சயின்ஸ்-ல் (Journal Science) பிரசுரமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Researchers Have Discovered A Massive Underground Ocean Beneath The Earth's Surface. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்