ஆபாச இணையதளங்கள் தடை : ட்விட்டரில் 'கொதித்த' திரைப்பட இயக்குநர்..!

ஆபாச இணைய தளங்களை தடை செய்யுமாறு இணையதள சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன..!

'பல்லான' படங்கள் காட்டும் வலைதளங்களுக்கு 'மூடு' விழா..!

இதற்கு ஆதரவும், அதே சமயம் பல 'தரப்பட்ட' எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில், ஆபாச வலைதளங்களுக்கு தடை விதித்து இருப்பதை குறித்து, 'யதார்த்த' திரைப்பட இயக்குனரான ராம் கோபால் வர்மா, தன் ட்விட்டர் பக்கத்தில் பல 'வெளிப்படை'யான கருத்துகளை பகிர்ந்துள்ளார்..!

திரைப்பட இயக்குனர்..!

திரைப்பட இயக்குனர்..!

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ரத்த சரித்திரம்' திரைப்படத்தை இயக்கியவர் - ராம் கோபால் வர்மா. பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.

எதிர்ப்பு..!

எதிர்ப்பு..!

ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பல 'யதார்த்தமான' கருத்துக்களை பதிவு செய்துள்ளார்..!

அரசாங்கமே முடிவு செய்யும்..?

அரசாங்கமே முடிவு செய்யும்..?

விட்டால் மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதைக்கூட அரசாங்கமே முடிவு செய்யும் போல என்று, தன் 'ட்வீட்'டில் இந்திய அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்..!

படுக்கை அறையை எட்டிப் பார்க்கும்..!

படுக்கை அறையை எட்டிப் பார்க்கும்..!

மேலும், முதலில் 'இந்த' தடை, பின் விரைவில் அரசாங்கம், மக்கள் எப்படி உடலுறவு கொள்கிறார்கள் என்று பார்க்க படுக்கை அறையை எட்டிப் பார்க்கும், என்றும் விமர்சித்துள்ளார்..!

23% பெண்கள்..!

23% பெண்கள்..!

இந்தியாவில் ஆபாச படங்களை பார்ப்பதில், 23% பெண்கள் தான் என்ற புள்ளி விவரத்தையும் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு என்ற அரசாங்கத்தின் பொய் விளக்கத்தை இவர் மறுக்கிறார்..!

சமம் :

சமம் :

இந்த தடையானது, விபத்து நடக்கிறது என்பதற்காக போக்குவரத்தை தடை செய்வதற்கு சமம் என்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

புள்ளி விவரம்..!

புள்ளி விவரம்..!

மேலும் ஆபாச இணையதளங்கள் சார்ந்த, சில புள்ளி விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

வரலாறு..!

வரலாறு..!

எது, எப்போது தடை செய்யப்பட்டாலும், அதன் அடி வேர் பலமாகும் என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உண்டு, என்ற தன் எச்சரிக்கையையும் பகிர்ந்துள்ளார்..!

ஃபேஸ்புக் பக்கத்திலும் :

ஃபேஸ்புக் பக்கத்திலும் :

இந்த தடை குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.. அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

 
English summary
Check out here about Director Ram Gopal Varma Tweets Against Porn Ban in India.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X