உங்களுக்கே தெரியாமல் உங்களுள் இருக்கும் நோய் - டிஜிட்டல் அம்னீசியா..!

|

'அம்சீனியா' (Amnesia) அதாவது மறதி என்பது நிகழ்ந்தவற்றை முற்றிலும் நினைவுபடுத்த இயலாத ஒரு மயக்க நிலை என்று சாதரணமான நினைப்பவரா நீங்கள்..?? தெரிந்து கொள்ளுங்கள் மறதியை 'அம்னீசிக் சின்ரோம்' ( Amnesic Syndrome) என்றும் கூறுவார்கள். அதாவது மூளை பாதிப்பு அல்லது உளவியல் தாக்கம் ஆகிய காரணங்களால் ஏற்படும் நினைவு பற்றாக்குறையை தான் 'அம்னீசிக் சின்ரோம்' என்பர்..!

உங்களுக்கே தெரியாமல் உங்களுள் இருக்கும் நோய் - டிஜிட்டல் அம்னீசியா..!

அப்படியான, அம்னீசிக் சின்ரோமின் ஒரு 'புதிய' வகைதான் டிஜிட்டல் அம்னீசியா (Digital Amnesia)..!

டிஜிட்டல் அம்னீசியா :

டிஜிட்டல் அம்னீசியா :

நிலையான தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் மனிதர்களின் தொழில்நுட்ப அறிவு முற்றிலுமாக தொலைந்து போகும் நிலையே டிஜிட்டல் அம்னீசியா எனப்படுகிறது. அதாவது எப்போது வேண்டுமானாலும் டிஜிட்டல் (கருவிகள்) மூலம் திரும்ப பெற்றுக் கொள்ளப் படலாம் என்ற எண்ணத்தில் எதையுமே மூளைக்குள் சேமித்து வைக்க முடியாத ஒரு இயல்பான நிலை..!

பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது :

பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது :

மனிதர்கள் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல்களை சார்ந்து இருப்பதின் மூலம் மனிதர்களின் நினைவு சக்தியானது மெல்ல மெல்ல அரிக்கப்படுகிறது. தகவல்களை சேமிக்க கணினிகளை பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.

நீண்ட கால நினைவு :

நீண்ட கால நினைவு :

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு அவரவர் தொலைப்பேசி எண் கூட நினைவில் நிற்காது. அதாவது டிஜிட்டல் ஆனது நமது நீண்ட கால நினைவுத்திறனை கட்டியெழுப்ப விடாது தடுக்கிறது.

ஒரு பெரிய எதிர்கால நோய் :

ஒரு பெரிய எதிர்கால நோய் :

மேலும் மேலும் அதிநவீனமயமாகிக் கொண்டே போகும் வன்பொருள், மென்பொருள் , இயக்க முறைமைகள் மற்றும் டிஜிட்டல் குறியீட்டு முறைகள் ஆகியவைகள் டிஜிட்டல் அம்னீசியாவை ஒரு பெரிய எதிர்கால நோயாக உருவாக்கி கொண்டிருக்கிறது.

மூளை வலிமை :

மூளை வலிமை :

ஒவ்வொரு முறையும் எதையாவது நினைவுப்படுத்தும் போது, நமது மூளையானது வலிமையடைகிறது. மேலும் இடையே நுழையும் சம்பந்தமில்லாத நினைவுகள் கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

நீடித்த நினைவக சுவடு சக்தி :

நீடித்த நினைவக சுவடு சக்தி :

அப்படியாக சாதரணமாக நினைவுப்படுத்தும் போதே நாம் திசை மாற வாய்ப்புகள் அதிகம் என்கிற போது எப்போதுமே மொபைல்போன் அல்லது கணினி அல்லது இன்டர்நெட் மூலம் தகவல்களை கண்டறிந்து தெளிந்துகொள்ளும் பழக்கம் ஆனது நம் திடமான மற்றும் நீடித்த நினைவக சுவடு சக்தியை முற்றிலுமாக அழித்துவிடும்.

அறிவுரை :

அறிவுரை :

பெரும்பாலும் நமது டிஜிட்டல் கருவிகளையே நாம் சார்ந்து இருப்பதால் நம் மூளையானதை செயல்படாத ஒன்றாக நாமே மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

 பழக்கத்தை கைவிட வேண்டும்  :

பழக்கத்தை கைவிட வேண்டும் :

டிஜிட்டல் அம்னீசியாவில் இருந்து வெளியேற, எதற்க்கெடுத்தாலும் கூகுள் செய்து விடைகளை தெரிந்து கொள்ளும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

படுக்கையில் மொபைல் பயன்பாடு : மோசமான பின் விளைவுகள்..!


மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!?


எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Digital dependence eroding human memory. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X