எல்சிடி டிவிக்கும் பிளாஸ்மா டிவிக்கும் என்ன வித்தியாசம்!!

|

ஒரு 15 வருடங்களுக்கு முன்னால் பெரும்பாலும் பிளாக் அன் ஓய்ட் டிவிகள் தான் அதிகம் இருந்தன. அந்த காலகட்டத்தில் கலர் டிவிகளை பார்ப்பது அரிதான காரியம். ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு, எல்சிடி மற்றும் பிளாஸ்மா டிவிகளுக்குத்தான் இன்று மவுசு அதிகம்.

எல்சிடி டிவியும் பிளாஸ்மா டிவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டு டிவிகளும் பார்ப்பதற்க்கு ஒரே மாதிரி மெலிதாக இருந்தாலும் இவைகள் இரண்டும் வேறு வேறு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

பிளாஸ்மா டிவியில் ப்ளோரஸன்ட் லைட் பல்ப் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதன் டிஸ்பிளேவிலே செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இரண்டு பேனல்கள் உள்ளது. அந்த இரண்டு பேனல்களுக்கிடையில் நியான்-ஜெனான் கேஸ் நிரப்பப்பட்டு அவைகள் பிரிக்கப்படுகின்றன பின்பு அது பிளாஸ்மா வடிவத்தில் சீல் செய்யப்பட்டு உற்பத்தி நடக்கிறது.

குறிப்பிட்ட இடைவெளையில் பிளாஸ்மா செட்டில் கேஸ் செலுத்தப்படுகிறது. இந்த கேஸ், ரெட், கிரீன் மற்றும் புளூ பாஸ்பரஸூடன் இணைந்து டெலிவிஷன் இமேஜை உருவாக்குகிறது. இந்த ரெட், கிரீன் மற்றும் புளூ பாஸ்பரஸ் குரூப்கள் தான் பிக்சல் என்று அழைக்கப்படுகின்றன.

இப்பொழுது எல்சிடி டிவியை பற்றி பார்ப்போம். எல்சிடி டிவி வேறு ஒரு டெக்னாலஜியை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உள்ள எல்சிடி பேனல் போலரைஸ் செய்யப்பட்டு ஒட்டப்பட்ட டிரான்ஸ்பரன்ட் மெட்டீரியலால் உருவான இரண்டு லேயர்களை கொண்டுள்ளது.

இதில் ஒரு லேயர் லிக்விட் கிரிஸ்டல் கொண்ட ஸ்பெஷல் பாலிமர் கோட் செய்யப்படுகிறது. பின்பு ஒவ்வொரு கிரிஸ்டலிலும் கரண்ட் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் நாம் இமேஜை பெறுகின்றோம். எல்சிடி கிரிஸ்டல்கள் தானாகவே லைட்டை உருவாக்காது. அதனால் CCFL/HCFL அல்லது LEDs போன்றவைகள் இதற்க்கு தேவைப்படுகின்றன.

எல்சிடி டிவி மற்றும் பிளாஸ்மா டிவியில் உள்ள நிறைகள், குறைகள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1


இதில் கான்டிராஸ்ட் மற்றும் வண்ணங்களின் நுட்பம் சிறப்பாக உள்ளது.

மோஷன் ஆர்ட்டிக்கல் மற்றும் ஆங்கில் வியூ இதில் சிறப்பாக உள்ளது.

#2

#2

எல்சிடி டிவி போன்று இது பிரைட்டாக இருப்பதில்லை.

எல்சிடி டிவியைட விட இதன் ஸ்கிரீன் அதிகம கிளார் அடிக்கும்.

பிளாஸ்மா டிவி அதிகம் ஹீட் ஆகும்.

#3

#3

பிளாஸ்மா டிவிக்கு நிறைய எனர்ஜி தேவைபடும்.

அதிக ஆல்டிடியூட் இருக்கும் இடத்தில் இது சரியாக இயங்காது.

இந்த டிவி 30,000 மணி நேரம் உழைக்கும், அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் 8 மணி நேரம் டிவி பார்த்தால் 9 ஆண்டுகள் அது போல் பார்க்கலாம். ஆனால் எல்சிடி டிவி 60,000 முதல் 1,00,000 மணி நேரம் உழைக்கும் திறன் கொண்டுள்ளது.

#4

#4

இது அதிகம் ஹீட் ஆகாது.

அதிக ஆல்டிடியூடிலும் இது சிறப்பாக இயங்கும்.

பிளாஸ்மா டிவியை விட இதில் பிரைட்னஸ் அதிகமாக இருக்கும்.

பிளாஸ்மா டிவியை விட இதில் ஸ்கிரீன் கிளார் அடிப்பது கம்மியாகதான் இருக்கும்.

#5

#5

பிளாஸ்மா டிவியுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக இருக்கும்.

எல்சிடி டிவி 60,000 முதல் 1,00,000 மணி நேரம் உழைக்கும் திறன் கொண்டுள்ளது.

#6

#6


இதில் கான்டிராஸ்ட் மற்றும் வண்ணங்களின் நுட்பம் சிறப்பாக இல்லை.

மோஷன் ஆர்ட்டிக்கல் மற்றும் ஆங்கில் வியூ இதில் சிறப்பாக இல்லை.

கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் ஸ்கிரீனில் வருவதற்க்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பிளாஸ்மா டிவியை விட இது விலை அதிகம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X