மெஷின் ஆன் செய்தால் சூடான சப்பாத்தி ரெடி..!

Posted by:

ஆணும் பெண்ணும் சமம் என்று கூறும் பல பெண்கள் இன்று வீட்டில் சமைப்பது வெகுவாக குறைந்திருக்கும் போக்கை நன்றாக அறிந்து வைத்திருப்பவரின் அற்புத கண்டுபிடிப்பு தான் ரோபோட்டிக் ரோட்டிமேக்கர்.

இந்த காலத்து இல்லத்தரசர்களுக்கு பயன் தரும் ஒர் உன்னத படைப்பான ரோபோட்டிக் ரோட்டிமேக்கர் குறித்த பல தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் ப்ரனோத்தி நகர்க்கர் கண்டறிந்த புதிய கருவி தான் ரோபோட்டிக் ரோட்டிமேக்கர்.

2009 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் இந்த கண்டுபிடிப்பிற்கு சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளாக தயாரிப்பு மற்றும் சோதனையில் இருந்து தற்சமயம் விற்பனைக்கு வந்திருக்கின்றது ரோபோட்டிக் ரோட்டிமேக்கர்.

இந்த கருவியை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றனர்.

முற்றிலும் தானாக இயங்கும் படி இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோட்டிக் ரோட்டிமேக்கரில் இருக்கும் மூன்று கன்டெய்னர்களில் ஒன்றில் கோதுமை மாவு, மற்றொன்றில் நீர், உப்பு போன்றவைகளையும் மற்றொரு கன்டெய்னரில் எண்ணெய் அல்லது நெய் போட்டு ஸ்விட்ச் ஆன் செய்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு சப்பாத்தி வீதம் கருவியில் இருந்து வெளியாகும்.

இந்த கருவிக்கான முன்பதிவு துவங்கி ஒரே வாரத்தில் அவை முடிந்து விட்டது. இந்த கருவியின் விலை 599 அமெரிக்க டாலர்களாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
here you will find the full details about a Device that makes a roti in minute. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting