ரூ.500, ரூ.1000 தடை, இயங்கும் ஏடிஎம்களை அறிந்து கொள்ளச் செய்யும் ஆப்ஸ்.!

கையில் காசு இல்லையா, ஏடிஎம் எங்கும் வேலை செய்யவில்லையா, அமைதியாய் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் ஏடிஎம்களை அறிந்து கொள்ளும் ஆப்ஸ்களை இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

By Meganathan
|

இந்தியாவில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 தடை செய்யப்பட்டு ஒரு வாரம் காலம் ஆகிவிட்டது. இன்றும் மக்கள் தங்களுக்கான பணத்தைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.

மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு ஆப்ஸ் மற்றும் சேவைகள் கிடைக்கின்றன. இங்குப் பணத் தட்டுப்பாடு காலத்தில் உங்களது அருகாமையில் இயங்கும் ஏடிஎம் மையங்களைக் கண்டறிய உதவும் சில ஆப்ஸ்களை வழங்கியுள்ளோம்..

வால்நட் (Walnut)

வால்நட் (Walnut)

சுமார் 1.8 மில்லியன் பயனர்களின் ஏடிஎம் பயன்பாட்டை டிராக் செய்து ஒவ்வொரு ஏடிஎம் குறித்த தகவல்களை வால்நட் ஆப் வழங்கும். இந்தத் தகவல்கள் வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.

கேஷ் நோ கேஷ் (CashnoCash)

கேஷ் நோ கேஷ் (CashnoCash)

நவம்பர் 14 ஆம் தேதி முதல் இயங்கும் இந்த இணையத்தளம் ஏடிஎம் மையங்கள் தவிர வங்கிகள் சார்ந்த தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏடிஎம் சர்ச் (ATMSearch)

ஏடிஎம் சர்ச் (ATMSearch)

ஏடிஎம்சர்ச் இணையத்தளம் சென்று உங்களுக்குத் தேவையான ஏரியாக்களில் வேலை செய்யும் ஏடிஎம் மையங்களின் முகவரியினை அறிந்து கொள்ள முடியும். இங்கு வழங்கப்படும் ஏடிஎம் மையங்களின் முகவரிகள் கடைசியாத சரி செய்யப்பட்ட நேரத்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஎம்எஸ் ஏடிஎம் ஃபைன்டர் (CMS ATM Finder)

சிஎம்எஸ் ஏடிஎம் ஃபைன்டர் (CMS ATM Finder)

இந்த இணையத்தளத்திலும் அருகாமையில் இயங்கும் ஏடிஎம் மையகளின் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கு வேலை செய்யாத ஏடிஎம்'களின் தகவல்களை அப்டேட் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Demonetisation Apps and services to find ATMs, banks with cash near you

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X