எப்பவும் பயன்படுத்துறீங்களே, இதெல்லாம் தெரியுமா.??

By Meganathan
|

எந்த ஸ்மார்ட்போன் வச்சிருக்கமோனு, முக்கியம் கிடையாது ஆனால் அதுல வாட்ஸ்ஆப் இருக்கானு மட்டும் தான் கேள்வியே.?

நம்மாளுங்க அதிகம் பேர் ஸ்மார்ட்போன் வாங்குறதே வாட்ஸ்ஆப் பயன்படுத்த தான் சொல்லலாம். எப்படியாவது 2ஜி இண்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தால் போதும் 24 மணி நேரமும் நம் நலம் விரும்பிகள் முதல் வியாபார புள்ளிகள் வரை அனைவருடனும் தொடர்பு கொள்ள முடியும்.

இதனாலேயே உலகின் தலைசிறந்த குறுந்தகவல் செயலி அதாவது மெசேஜிங் ஆப் என்ற பெயர் கொண்டுள்ளது வாட்ஸ்ஆப். 24 மணி நேரமும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த தெரியுது, ஆனால் வாட்ஸ்ஆப் ஆ பற்றி இதெல்லாம் தெரியுமா?

வாட்ஸ்ஆப் ஆ பற்றிப் பலரும் அறிந்திராத, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள் ஸ்லைடர்களில்..!!

பணியாளர்

பணியாளர்

உலகம் முழுக்க ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியின் ஆண்ட்ராய்டு பிரிவின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 5 மட்டுமே. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜான் கௌம் தெரிவித்தார்.

நிராகரிப்பு

நிராகரிப்பு

வாட்ஸ்ஆப் நிறுவனர்களான ஜான் கௌம் மற்றும் ப்ரியான் ஆக்டன் முன்னதாக யாஹூ நிறுவனத்தில் பணியாற்றினர். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களில் பணி மறுக்கப்பட்டனர் அதன் பின் துவங்கப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை தான் ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

புகைப்படம், காணொளி

புகைப்படம், காணொளி

ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களைக் கம்ப்ரெஸ் செய்ய அதாவது அவற்றின் மெமரியை குறைக்க வாட்ஸ்ஆப் பயன்படுத்தலாம். உங்களது கருவியில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை உங்களது நண்பருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினால், நீங்கள் அனுப்பிய புகைப்படம் மற்றும் வீடியோக்களின் அளவு குறைவதோடு அதன் தரமும் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வதால் கருவியில் மெமரியை சேமிக்க முடியும்.

பயனர் கணக்கு

பயனர் கணக்கு

வாட்ஸ்ஆப் தனது பயனர் கணக்குகளை அவர்களின் [phone number]@s.whatsapp.net அதாவது மொபைல் போன் நம்பர் மூலம் பதிவு செய்து கொள்ளும்.

பகிர்வு

பகிர்வு

இன்று பெரும்பாலான இணையதளங்களிலும் இந்த அம்சம் பயன்படுத்தப்படுகின்றது. ஸ்மார்ட்போன் கருவியில் வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பின் பிரவுஸர் முகவரியில் "whatsapp://send?text=HELLO" என டைப் செய்தால் வாட்ஸ்ஆப் செயலி ஓபன் ஆகி ஏதாவதொரு காண்டாக்டினை தேர்வு செய்யக் கோரும், தேர்வு செய்த பின் குறுந்தகவல் குறிப்பிட்ட காண்டாக்டிற்கு அனுப்பப்பட்டு விடும். இதோடு "HELLO" என்ற வார்த்தைக்கு மாற்றாக வேறு வார்த்தைகளையும் டைப் செய்யலாம்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

வாட்ஸ்ஆப் செயலியில் குறுந்தகவல்கள் படிக்கப்பட்டதை உணர்த்தும் அம்சம் இருக்கின்றதைப் போல், குறிப்பிட்ட குறுந்தகவல் சரியாக எத்தனை மணிக்குப் படிக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முடியும். இதைச் செய்யக் குறிப்பிட்ட குறுந்தகவலை அழுத்தி கிளிக் செய்து 'இன்ஃபோ (Info) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

கஸ்டம் நோட்டிஃபிகேஷன்

கஸ்டம் நோட்டிஃபிகேஷன்

வாட்ஸ்ஆப் செயலியில் தினமும் எக்கச்சக்கமான குறுந்தகவல்கள் வருகின்றன, இதில் முக்கியமானவர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்களை அடையாளம் காணப் பிரத்தியேக ரிங்டோன், அல்லது வித்தியாச சத்தம் போன்றவற்றைச் செட் செய்து கொள்ள முடியும்.

தகவல்

தகவல்

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்தும் போது மொபைலிலும் வாட்ஸ்ஆப் இணைக்கப்பட்டிருக்க வேண்டியதன் அவசியம் இது தான். வாட்ஸ்ஆப் உங்களது தகவல்களைச் சேமிப்பது கிடையாது. உங்கள் கருவியில் இருந்து டெலிவரி ஆகாத குறுந்தகவல்கள் மட்டும் வாட்ஸ்ஆப் சர்வரில் இருக்கும், அதுவும் குறுந்தகவல் டெலிவரி ஆனதும் அழிந்து போகும்.

ஃபார்மேட்

ஃபார்மேட்

இது சமீபத்தில் வழங்கப்பட்ட அப்டேட் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதாகும். இது பலரும் அறிந்ததே. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களில் வார்த்தைகளில் ஃபார்மேட் அம்சங்கள் பயன்படுத்துவது. அதாவது போல்டு, இடாலிக் மற்றும் ஸ்டிரைக்-த்ரூ போன்றவற்றைப் பயன்படுத்துவதாகும்.

என்க்ரிப்ஷன்

என்க்ரிப்ஷன்

வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும் அனைத்து குறுந்தகவல்களும் முழுமையான பாதுகாக்கப்படுகின்றன, இதனால் யாராலும் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்களைப் படிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.

Best Mobiles in India

English summary
Crazy WhatsApp Facts You Didn't Know Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X