ஆண்ட்ராய்டு ஜிமெயில் தந்திரங்கள்..!!

Written By:

ஆண்ட்ராய்டு கருவியில் இன்று ஜிமெயில் பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்றே கூறலாம். மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஜிமெயில் சேவைகள் அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கென அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில் சேவையை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள சில எளிய வழி முறைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இன்பாக்ஸ்

புதிய ஜிமெயில் செயலியில் ஆல் இன்பாக்சஸ் ஆப்ஷன் மூலம் பல்வேறு ஜிமெயில் கணக்குகளில் இருந்து மின்னஞ்சல்களை பெற முடியும்.

ஆக்ஷன்

ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் சில அசைவுகளின் மூலம் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். மெயில்களை ஆர்ச்சீவ் செய்ய வலது அல்லது இடது புறமாக ஸ்வைப் செய்யலாம். ப்ரோஃபைல் படங்களை க்ளிக் செய்தால் பல்வேறு அம்சங்கள் திரையின் மேல் புறம் தெரியும், அதில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

சின்க்

ஜிமெயில் மெனு மூலம் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது ஜிமெயில் சின்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து மின்னஞ்சல்களும் சரியாக வருவதோடு உங்களது தகவல்களும் ஜிமெயில் சர்வரில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.

தேடுதல்

ஜிமெயிலில் பழைய மின்னஞ்சல்களை எளிமையாக தேட "older_than:1y" or "older_than:1d குறியீடுகளை பயன்படுத்தலாம், இவ்வாறு செய்யும் போது ஒரு நாள் அல்லது ஒரு வருடம் வரை பழைய மின்னஞ்சல்களை எளிமையாக தேட முடியும்.

ம்யூட்

சில சமயங்களில் மிகவும் முக்கியமான மின்னஞ்சல்களுக்காக காத்திருக்கும் போது தேவையற்ற மின்னஞ்சல்கள் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க ம்யூட் ஆப்ஷனினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது தேவையற்ற மின்னஞ்சல்கள் தானாக ஆர்ச்சீவ் செய்யப்பட்டு விடும், இதனால் அவை உங்களை தொந்தரவு செய்யாது.

ஆட்டோ அட்வான்ஸ்

பல்வேறு மின்னஞ்சல்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தவோரானால் ஆட்டோ அட்வான்ஸ் ஆப்ஷன் உங்களுக்கானது தான். இதன் மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சலை அழித்தவுடன் உடனடியாக இன்பாக்ஸ் செல்வதை தவிர்த்து அழித்தவுடனேயே அடுத்த மின்னஞ்சலை பார்க்க முடியும்.

சார்ட்

உங்களது இன்பாக்ஸ் ஆப்ஷனில் ப்ரியாரிட்டி இன்பாக்ஸ், இன்பாக்ஸ், ஸ்பேம் என பிரித்து கொண்டால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் தானாக குறிப்பிட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு விடும், இதனால் விளம்பரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை கண்டறிவது எளிதாக முடிந்து விடும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Huawei Event Liveblog Honor 7 Launching in India Today. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்