சீனாவில் பதற்றம் : வானத்தில் 'மிதக்கும் நகரம்', கேமிராவில் பதிவு..!

Posted by:

இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வாயால் சொன்னால் இந்த உலகம் நம்பாது - சாட்சி வேண்டும். சாட்சி இருந்தால் பொய் ஒன்றை கூட உண்மை ஆக்கி விடலாம் என்கிற போது, உண்மையை நிரூபிப்பது என்பதொன்றும் பெரிய கடினம் அல்ல.

சீனா அதிரடி : ஏலியன் தேடலில் புதிய திருப்பம்..!

அப்படியாக, சமீபத்தில் சீனாவில் உள்ள ஜியான்ங்க்ஷி மற்றும் போஷன் ஆகிய இரண்டு நகரங்களின் வான் பகுதியிலும் தோன்றிய 'மிதக்கும் நகரம்' சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மக்கள் சாட்சி :

'மிதக்கும் நகரம்' வானத்தில் தோன்றிய அந்த காட்சியை கண்டதாக ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சி கூற, அந்த காட்சியானது கேமிராவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் :

பதிவான அந்த காட்சியில் வானத்தில் மாபெரும் நகர அமைப்பு போன்ற ஒன்று பெரிய பெரிய கட்டிடங்களுடன் வானத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது.

யூட்யூப் :

இந்த காட்சி யூட்யூப்பில் பதிவேற்றம் செய்த பின்னர் உலகம் முழுக்க தீயாய் பரவியுள்ளது மிதக்கும் நகரம் வீடியோ..!

சதி கோட்ப்பாட்டாளர்கள் :

மேலும் உலகம் முழுவதிலும் உள்ள சதி கோட்ப்பாட்டாளர்கள் இந்த மிதக்கும் நகரம் குறித்த தங்களது விளக்கத்தினை அளித்த வண்ணம் உள்ளனர்.

வீடியோ :

கேமிராவில் பதிவான மிதக்கும் நகரம் வீடியோ..!

நாசாவின் ரகசிய திட்டம் :

இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்கிறார்கள் சில சதி கோட்ப்பாட்டாளர்கள்.

இல்லுஷன் காட்சி :

அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான் - ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.

ஏலியன்கள் :

மேலும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள், இது உலகில் தோன்றியது அல்ல, வேறு ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று, என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
சீனாவின் வான் பகுதியில் தோன்றிய மிதக்கும் நகரம். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்