ஐபோன் தான் வேண்டுமா, வாங்கும் முன் சில பரிசீலனைகள்.!!

Written By:

பணம் இருக்கோ, இல்லையோ ஆசை வந்தால் கடன் வாங்கியாவது ஐபோன் ஒன்றை வாங்கி விடுகின்றனர். ஐபோன் மோகம் இவர்களை வாங்க தூண்டுகின்றது என்றாலும், ஒரு சிலர் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின் தான் வாங்குவது குறித்து முடிவு செய்கின்றனர்.

அந்த வகையில் ஐபோன் குறித்த ஆய்வில் ஈடுப்பட்டு இணையத்தை துளாவி கொண்டிருப்போருக்கு இந்த தொகுப்பு பயன் தரும். ஐபோன் வாங்கும் முன் பரிசீலனை செய்ய வேண்டியவைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பட்ஜெட்

ஐபோன்களின் விலை அதிகம் என அனைவருக்கும் தெரியும், ஏற்கனவே ஐபோன் வைத்திருந்து இம்முறை அதனினே அப்கிரேடு செய்ய வேண்டும் எனில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை ஏற்படும். இதில் மெமரி அதிகம் வேண்டுமானால் செலவும் அதிகமாகும்.

பழைய ஐபோன்

ஒரு வேலை பழைய போனினை விற்க முடிவு செய்திருந்தால், கருவிக்கு வாரண்டி இருத்தல் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். பழைய போனினை அதிக விலைக்கு விற்றாலும் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய சூழல் நிச்சயம் ஏற்படும்.

பயன் என்ன

உண்மையில் இம்முறை வாங்கும் ஐபோன் உங்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை பழைய ஐபோன் அல்லது வேறு ஏதும் கருவியை பயன்படுத்தினால் பெரிய திரை, கூடுதல் புதிய அம்சங்களை பயன்படுத்த புதிய கருவியை வாங்கலாம்.

அம்சங்கள்

புதிய கருவியில் இருக்கும் அம்சங்களை பழைய கருவியில் பயன்படுத்த முடியுமா என்றும் பார்க்க வேண்டும். புதிய இயங்குதளங்களில் சில புதிய அம்சங்கள் வழங்கப்படும் நிலையில். புதிய கருவியில் கிடைக்கும் அம்சங்களை பழைய கருவியிலேயே பயன்படுத்தலாம். இந்த சூழலில் புதிய கருவி கட்டாயம் வாங்க வேண்டுமா என்பதையும் யோசிப்பது நல்லது.

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்குகின்றது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருந்து ஆப்பிள் இயங்குதளம் பயன்படுத்த வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல், காணனன்டாக்ட், மற்றும் இதர தரவுகளை புதிய இயங்குதளத்திற்கு பரிமாற்றம் செய்வது கடினம் கிடையாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Considerations Before Purchasing A New iPhone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்