எது சிறந்தது.? ஜியோ ஜிகாபைபர் அல்லது பிஎஸ்என்எல் பிபிஜி1199..?

|

ரிலையன்ஸ் ஜியோ சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்ட உடனேயே, பிஎஸ்என்எல் ஜியோ கட்டண திட்டங்களுடன் பொருந்தும் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டது. சமீபத்தில், பிஎஸ்என்எல் பல சுவாரஸ்யமான பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்துள்ளது அதில் ஒன்று தான் ஒரு மாதத்திற்கு ரூ 1,199 விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ ஆபர் திட்டம்.

மேலும், ரிலையன்ஸ் ஜியோ விரைவில் தனது ஜிகாபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் வதந்திகள் நிலவுகிறது. அப்படியாக ரிலையன்ஸ் ஜிகாபைபர் மற்றும் பிஎஸ்என்எல் பிபிஜி 1199 ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இடையேயான கட்டணம், நன்மைகள் மற்றும் சலுகைகள் சார்ந்த ஒரு ஒப்பீட்டை இங்கே வழஙகுகிறோம்.

பிபிஜி 1199 - வரம்பற்ற அழைப்புகள்

பிபிஜி 1199 - வரம்பற்ற அழைப்புகள்

இந்த சேவை வரம்பற்ற அழைப்புகளின் ஒரு தொகுப்பை வழங்குகிறது, பயனர்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 24 மணி நேரம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இரண்டையும் அனுபவிக்க முடியும்.

ஜியோ ஜிகாபைபர் :

ஜியோ ஜிகாபைபர் :

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாபைபர் இணைய சேவையின் சிறப்பம்சமாக ஜியோ 4ஜி சேவையை ஸ்மார்ட்போன்களுக்கு வழங்குகிறது அப்படியானால் சேவை அறிமுகமான பிறகு 90 நாட்கள் வரம்பற்ற மற்றும் இலவச தரவுதனை அனுபவிக்க முடியும்.

வேகம் :

வேகம் :

வேகத்தின் வாரியாக பார்க்கும் பொது ஜியோ சிறப்பானதாக திகழ்கிறது. பிஎஸ்என்எல் பிபிஜி 1199 திட்டம் ஒரு 2 எம்பிபிஎஸ் தரவு வேகம் தரும் போது, விரைவில் முன்னெடுக்கவுள்ள ரிலையன்ஸ் ஜிகாபைபர் திட்டம் நொடிக்கு 50 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வேகம் வரை கொடுக்கும்.

கட்டண திட்டங்கள் :

கட்டண திட்டங்கள் :

பிஎஸ்என்எல் இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. பிபிஜி 1199 திட்டம் மற்றும் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் 2ஜிபி தரவையும் பின்னர் வரம்பை கடந்த பின்னர் 1எம்பிபிஎஸ் அளவிலான வரம்பற்ற தரவையும் வழங்கும் திடமான பிபிஜி 249. மறுபக்க ஜியோ ஜிகாபைபர் ஆனது ரூ.1,500 - ரூ. 5,500 வரையிலான திட்டங்களை பல்வேறு வழங்குகிறது அவைகள் ஒவ்வொன்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவு பயன்பாடு வரம்பு :

தரவு பயன்பாடு வரம்பு :

சமீபத்திய அறிக்கைகளின் படி, ஜியோ ஜிகாபைபர் திட்டங்களின் தரவு பயன்பாடு வரம்புகள் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான 2000 ஜிபி திட்டத்தில் தொடங்கி 600 எம்பிபிஎஸ் வேகத்திலான 300 ஜிபி திட்டம் வரை நீள்கிறது.

பணத்தை சேமிக்க மொத்தமாக செலுத்த பிஎஸ்என்எல் :

பணத்தை சேமிக்க மொத்தமாக செலுத்த பிஎஸ்என்எல் :

பிஎஸ்என்எல் திட்டத்தின் படி, பயனர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான பிபிஜி 1199 திட்டத்தை அனுபவிக்க விரும்பினால் சில தள்ளுபடிகளுடன் சேர்த்து பணத்தையும் சேமிக்கலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிஎஸ்என்எல் 1125 பிளான், உடனே மாறினால் கிடைக்கும் அட்டகாச நன்மைகள்.!!

Best Mobiles in India

English summary
Should you go for Reliance Jio GigaFiber or BSNL BBG 1199: Tariff, Data Usage & More Compared. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X