மோட்டோ எம் தெளிவான புகைப்படம் இணையத்தில் கசிந்தது.!

மோட்டோரோலாவின் புதிய மோட்டோ எம் கருவியின் தெளிவான புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

By Meganathan
|

தயாரிப்பில் இருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த ரகசியங்கள் ஆன்லைனில் கசிவது ஒன்றும் புதிய விடயமில்லை, என்றாலும் கருவி குறித்த தகவல்களை அறிந்து கொள்ள மக்கள் என்றும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

ஸ்மார்ட்போன் பயனர்களுக்குத் தெரியக் கூடாது என்ற நோக்கில் கருவியைத் தயாரிக்கும் போது தான் இது போன்ற புகைப்படங்கள் ரகசியமாகக் கசிந்து விடுகின்றன. எப்படிப் பார்த்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் விளம்பரமாகவே அமையும்.

இணையத்தில் ரகசியமாகக் கசிந்திருக்கும் மோட்டோ எம் கருவி குறித்த சில தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

கருவியின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் கொண்ட முபதல் மோட்டோரோலா கருவியாக மோட்டோ எம் அமைந்துள்ளது. 16 எம்பி பிரைமரி கேமராவின் கீழ் இந்தக் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

புகைப்படம்:TechDroider

செல்ஃபீ

செல்ஃபீ

அழகிய செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் அழகிய கேமரா அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புகைப்படம்:TechDroider

மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ்

மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ்

XT1662 என்ற பதிப்புச் சீனாவில் வெளியிடப்பட இருக்கும் கருவியில் மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. அவ்வாறு பயனர்கள் ஸ்கைப், மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மற்றும் ஒன் டிரைவ் போன்ற ஆப்ஸ்களைப் பயன்படுத்த முடியும்.

புகைப்படம்:GSMArena

திரை

திரை

மோட்டோ எம் கருவியானது 5.5 இன்ச் 1080*1920 பிக்ஸல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6755 SoC, ஆக்டா கோர் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் CPU, Mali-T860 MP2 GPU, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படம்:Skinomi

இயங்குதளம்

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ எம் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

குறிப்பு: வெளியாகியிருக்கும் புதிய தெளிவான புகைப்படம் Skinomi எனும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Clear photo of Motorola Moto M leaks Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X