ரஷ்யாவிற்கே 'விபூதி அடிக்க பார்க்கும்' சீனா..!

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவை பற்றிய 'சாதனை' செய்திகள் அனுதினமும் வெளியாகி கொண்டே இருந்தாலும் சர்வதேச விண்வெளி ஏவும் சந்தை மற்றும் வெளியீட்டு வாகனங்கள் (global space launch market and launch vehicles) ஆகியவைகளில் முதல் இடத்தில் இருப்பது என்னவோ ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோஸ்மோஸ் (Roskosmos) தான்..!

அதே சமயம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது என்பதையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு விண்வெளி ஆராய்சிகளில், ரஷ்யா முன்னேறிக் கொண்டே வருகிறது..!

நியாமற்ற பரிமாற்றம் :

நியாமற்ற பரிமாற்றம் :

விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டுள்ள சீனா தற்போது ரஷ்யாவிடம் நியாமற்ற பரிமாற்றம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்ட செய்தி வெளியாகியுள்ளது.

ஒப்பந்தம் :

ஒப்பந்தம் :

அதாவது சீனா, ரஷ்யாவுடன் விண்வெளி தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் (exchange space technologies) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வேண்டும் :

தொழில்நுட்பம் வேண்டும் :

அதன்படி, சீனா கதிர்வீச்சு -எதிர்க்கும் மின்னணு விண்வெளி உபகரணங்கள் உருவாக்க தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதாகவும் அதற்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து திரவ ராக்கெட் என்ஜின்கள் உருவாக்க தேவையான தொழில்நுட்பம் வேண்டும் என்றும் சீனா கேட்டுள்ளது.

எதிர்ப்பு :

எதிர்ப்பு :

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோஸ்மோஸ் ஆனது, சீனாவானது ரஷ்யாவின் திரவ ராக்கெட் என்ஜின்களை கேட்டால் பரவாயில்லை. அவர்கள் அதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்கிறார்கள், என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சமம் ஆகாத ஒரு பரிமாற்றம்  :

சமம் ஆகாத ஒரு பரிமாற்றம் :

நியாயமாக பார்த்தல் சீனா பதிலுக்கு வழங்குவதாக கூறும் கதிர்வீச்சு -எதிர்க்கும் மின்னணு விண்வெளி உபகரணங்கள் உருவாக்க தேவையான தொழில்நுட்பம் ஆனது கொஞ்சம் கூட சமம் ஆகாத ஒரு பரிமாற்றம் ஆகும்.

முடியாத காரியம் :

முடியாத காரியம் :

முன்னதாக, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சீனா கேட்டுக்கொண்டுள்ள ராக்கெட்களை வழங்குவது முடியாத காரியம் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு :

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு :

ரஷ்யாவை போல் இல்லாது சீனா, எம்டிசிஆர் (MTCR) எனபப்டும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு ( Missile Technology Control Regime) அமைப்பில் இணைந்திருக்கவில்லை.

ஒத்துழைப்பு வழங்காது :

ஒத்துழைப்பு வழங்காது :

ஆகையால், ராக்கெட் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பில் இருக்கும் ரஷ்யா, சீனாவின் நியாயமற்ற பரிமாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்காது என்றே தெரிகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலகை மிரள வைக்கும் வல்லமை கொண்ட அதிநவீன 6 ஆயுதங்கள் மற்றும் அதன் திறன்கள் - புதின் ஒன்றும் முட்டாள் இல்லை, 'கைவசம்' நிறையா இருக்கு..!!


உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
China wants to unfairly exchange space technologies with Russia. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X