அம்பலமானது : அமெரிக்கவிற்கு எதிரான சீனாவின் சதி திட்டம்..!

Posted by:

சிரியா மீது நடத்திய தாக்குதலில் இருந்து தான் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா மிகவும் அபாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டன.

இப்போது சீனாவும் அந்த பட்டியலில் இணைந்து கொள்ள நினைக்கும்படியான தகவல் ஒன்று அம்பல்மாகியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

செய்தி :

கிழக்கு சீன பகுதியில் அடையாளம் தெரியாத, செயற்கைகோள்களுக்கு எதிரான (Anti-Satellite) அதிநவீன ஆயுதம் ஒன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ள செய்தி உறுதியாகி உள்ளது.

அமெரிக்கா :

செயற்கைகோள்களை அழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சீனாவின் இந்த பரிசோதனை அமெரிக்க செயற்கைகோள்களை குறி வைத்தே நடத்தப்பட்டுள்ளது என்பதும் அம்பலாமாகி உள்ளது.

தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் :

இந்த தகவலை அமெரிக்க ஊடகமான தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் (The Washington Free Beacon) தெரிவித்துள்ளது.

டாங் நெங்-3 :

சீனா நடத்திய இந்த விபரீதமான பரிசோதனையின் பெயர் டாங் நெங்-3 மிசைல் (Dong Neng-3 missile) என்று கூறப்படுவதாகவும் தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் தெரிவித்துள்ளது.

உறுதி :

மேலும் இந்த சோதனை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி நடத்தப்பட்ட போதிலும் தற்போது தான் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை நிலையம் :

கிழக்கு சீன பகுதியில் உள்ள, சீனாவின் ஏவுகணை பரிசோதனை நிலையமான கொர்லா மிசைல் டெஸ்ட் காம்ப்ளெக்ஸ் (Korla Missile Test Complex) நிலையத்தில் இந்த பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தகவல் :

இதை தவிர்த்து சீனாவின் இந்த பரிசோதனை குறித்து அனைத்து வகையான தகவல்களும் மறைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை :

மேலும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் இந்த பரிசோதனை வெற்றி அடைந்தததா அல்லது தோல்வியை தழுவியதா என்பதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மிங் போ :

மேலும் ஹாங்காங்கை சேர்ந்த ஊடக நிறுவனமான மிங் போ (Ming Pao) தகவலின்படி இறுதிகட்ட இடைமறிப்பு ஏவுகணை சோதனை வளிமண்டலத்தில் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

சீனா மறைக்கிறது :

தோல்வியோ வெற்றியோ எது நடந்தாலும், இது போன்ற செயற்கைகோள்களுக்கு எதிரான ஏவுகணை சார்ந்த பல விடயங்களை சீனா மூடி மறைக்கிறது என்பது தான் நிதர்சனம்.

மொத்தம் :

மேலும் 2005-ஆம் ஆண்டில் இருந்து இது வரை மொத்தம் 8 முறை ஆன்ட்டி-சாட்டிலைட் ஏவுகணை (anti-satellite missile) பரிசோதனையாயை சீனா நிகழ்த்தியுள்ளது.

ஏவுகணை இடைமறிப்பு :

அவைகளில் 2010, 2013, மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் நிலம் சார்ந்த ஏவுகணை இடைமறிப்பு (land-based missile interception) சோதனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை :

2007-ஆம் ஆண்டு தான் சீனா இது போன்ற செயற்கைகோள்களுக்கு எதிரான ஆயுதங்களை தயாரித்து, பரிசோதனை செய்து வரும் விடயம் முதல் முதலில் அம்பலாமானது.

ரகசியங்கள் :

செயலிழந்த வானிலை செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தத்தின் மூலம் தான் சீனாவின் ரகசியங்கள் மெல்ல மெல்ல வெளியாக தொடங்கின.

30,000 கிலோ மீட்டர் :

2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்றில் சீனா அனுப்பிய ஏவுகணை பூமியில் இருந்து சுமார் 30,000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படம் : கூகுள்

English summary
China Tests Secret Missile Capable of Hitting US Satellites. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்