வாட்ஸ்ஆப்பில் சென்னை மாநகராட்சி. அடடே.!!

Written By:

அரசு மருத்துவ மையங்களில் அதிகாரிகளின் வருகையை பதிவு செய்ய புதிய முறையை சென்னை மாநகராட்சி கொண்டு வந்திருக்கின்றது. இதன் மூலம் நகராட்சி துவக்க மருத்துவ மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் வருகை பதிவு செய்வதை உறுதிப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாட்ஸ்ஆப் க்ரூப்

கடந்த வெள்ளி கிழமை முதல் பின்பற்றப்படும் இந்த புதிய முறையில் 15 மண்டலங்களை சேர்ந்த சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகள் தங்களது பகுதியில் இயங்கும் இரு மருத்துவமனைகளுக்கு காலை 8.00 முதல் 8.30 மணிக்குள் சென்று தங்களுடைய ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து அதனினை வாட்ஸ்ஆப் குழுவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குற்றச்சாட்டு

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளர் உள்ளிட்டோர் தினந்தோரும் காலதாமதமாக வந்து சீக்கிரம் வீடு திரும்புகின்றனர் என குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் விளைவாக இந்த புதிய முறை பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சை

சென்னையில் மொத்தம் 140 நகராட்சி துவக்க மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன, இவை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 வரை இயங்க வேண்டும். நாள் ஒன்றைக்கு சுமார் 150 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

விடுமுறை

மருத்துவ அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் இருக்கவே இந்த புதிய முறை துவங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சியை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்கானிப்பு

மருத்துவம் இல்லாமல் சாலை பணிகள் மற்றும் குப்பை அகற்றும் பணிகளை கண்கானிக்கவும் வாட்ஸ்ஆப் செயலியை சென்னை மாநகராட்சி பயன்படுத்தப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Chennai takes to WhatsApp and sees who's late Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்