சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுளில் கூடுதல் பொருப்புகள்

By Meganathan
|

கூகுளின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் இந்தியரான சிந்தர் பிச்சைக்கு சில கூடுதல் பொருப்புகளை வழங்கியுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் கவனிக்கவுள்ளார்.

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுளில் கூடுதல் பொருப்புகள்

சென்னையைச் சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பணிக்கு சேர்ந்தார்.

உலகின் முதல் தர இணைய தேடுதல் மையமாக விளங்கும் கூகுள் பல மாற்றங்களை இந்தாண்டு சந்தித்திருக்கிறது. தலைமை அதிகாரி நிகேஷ் அரோரா ஜூலை மாதம் கூகுளில் இருந்து வெளியேறினார், இவர் வகித்த பதிவி ஒமிட் கோர்டெஸ்தானிக்கு வழங்கப்பட்டது. கூகுளின் சமூக வலைதள சேவைகளுக்கான தலைமை அதிகாரி விக் குன்டோத்ரா ஆப்ரல் மாதம் தன் பதிவியை ராஜினாமா செய்தார்.

Best Mobiles in India

English summary
Chennai's Sundar Pichai to head more Google products. Here you will find the detailed summary of the new products that sundar is to head.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X