சென்னையில் சர்வதேச அழைப்புகள் இலவசம் : ஸ்கைப்

Written By:

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை தொட்ர்ந்து ஸ்கைப் நிறுவனமும் சென்னைவாசிகளுக்கு உதவ முன்வந்திருக்கின்றது. இந்நிறுவனம் தமிழகம் முழுவதிலும் சர்வதேச லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் சர்வதேச அழைப்புகள் இலவசம் : ஸ்கைப்

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளினால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சர்வேதச லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம் என ஸ்கைப் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னையில் சர்வதேச அழைப்புகள் இலவசம் : ஸ்கைப்

மேலும் மொபைல் போன் அழைப்புகளில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகள் குறித்து நாங்கள் அறிவோம், இந்த பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். வாடிக்கையாளர்களின் கருத்து கேட்டு அதற்கேற்ப புதிய அப்டேட்களை சென்னை மற்றும் தமிழகத்திற்கு முதன்மையாக வழங்குகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சென்னையில் சர்வதேச அழைப்புகள் இலவசம் : ஸ்கைப்

தற்சமயம் சென்னையில் ஏற்ப்பட்டிருக்கும் பாதிப்புகளினால் சரியான சேவையை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது, நிலைமை சீரானதும் இந்த தகவலை தெரியப்படுத்துவோம் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Chennai flood: Skype announced free international calls to Tamil Nadu. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்