மார்ச் முதல் சென்னை சென்ட்ரலில் இலவச வை-பை.!!

By Meganathan
|

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூகுளின் இலவச வை-பை பெற இருக்கின்றது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகத்தில் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களை தேர்வு செய்திருக்கின்றார்.

மார்ச் முதல் சென்னை சென்ட்ரலில் இலவச வை-பை.!!

அதன் படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலவச வை-பை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்க கூகுள் நிறுவனம் மற்றும் ரயில்டெல் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 2014 முதல் வை-பை சேவை சோதனை செய்யப்பட்டு வருவதால் மார்ச் 2016 முதல் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்க முடியும் என கூறப்படுகின்றது.

மார்ச் முதல் சென்னை சென்ட்ரலில் இலவச வை-பை.!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், அரக்கோணம், கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட இருப்பதாக ரயில்டெல் நிறுவனத்தை சேர்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட்டு விடும் என தெரிவித்திருந்தார். கூகுளின் இலவச வை-பை திட்டம் இந்தியாவில் முதல் முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் துவங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Chennai Central Railway Station to get Google Wi-fi by March. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X