ஸ்மார்ட்போன் விலை ரூ.501 மட்டுமே/- நம்பலாமா பாஸ்.!?

Written By:

சாம்ப்ஒன் இதுவரை நாம் யாரும் கேள்விப்படாத ஸ்மார்ட்போன் நிறுவனம் ஆகும். தனது அதிரடி அறிவிப்பு மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன் கருவிகளை ரூ.501க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரிங்கிங் பெல்ஸ் எனும் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் கருவிகளை ரூ.251க்கு வழங்குவதாக அறிவித்து ஸ்மார்ட்போன் சந்தையை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்போது ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக சாம்ப்ஒன் நிறுவனம் பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இணையதளம்

சாம்ப்ஒன் சி1 ஸ்மார்ட்போன் கருவிகளை வாடிக்கையாளர்கள் ரூ.501க்கு வாங்க முடியும் என்றும், முன்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிளாஷ் விற்பனை

champ1india.com தளத்தில் வாடிக்கைாயளர்கள் புதிய சி1 கருவியினை பிளாஷ் விற்பனை முறையில் வாங்க முடியும் என்றும், பிளாஷ் விற்பனையானது செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம்

பிளாஷ் விற்பனையில் கருவிகளை வாங்குவோர் பணத்தினை கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் மூலம் வழங்க முடியும் என்றும் அந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோளாறு

முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கும் நிலையிலும் அந்த இணையதள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கருவியினை 24 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய இயலாத எனக் குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகம்

ஃப்ரீடம் 251 கருவிகளை முன்பதிவு செய்யும் போது அதிகளவு கூட்ட நெரிசல் காரணமாக இணையதளம் முடங்கிப் போனது, ஆனால் சாம்ப்ஒன் நிறுவன இணையதளத்தில் கோளாறு இருப்பதாகக் கூறப்படுவது சந்தேகங்களைக் கிளப்புகின்றது.

சின்னம்

சாம்ப்ஒன் நிறுவனத்தின் லோகோ பார்க்க மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தைத் தழுவியதாக காணப்படுகின்றது. இந்த லோகோவின் நிறம் மற்றும் வடிவமைப்பு மைக்ரோமேக்ஸ் நிறுவத்தை நினைவூட்டுகின்றது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை சாம்ப்ஒன் சி1 கருவியில் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 2 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளன.

விலை

இன்று வெளியாகும் மற்ற நிறுவனங்களின் பட்ஜெட் விலை கருவிகளை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் சாம்ப்ஒன் சி1 கருவியின் இந்திய விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கருவிகள்

சாம்ப்ஒன் சார்பில் தற்சமயம் ஸ்மார்ட்போன் கருவி மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அந்நிறுவன இணையதளத்தில் ஸ்மார்ட்வாட்ச், டேப்ளெட் போன்ற கருவிகளையும் வெளியிட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

உண்மை

முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனமும் ரூ.501 விலையில் மொபைல் போன் கருவிகளை விற்பனை செய்தது. ஆனால் இன்று பல்வேறு நிறுவனங்களும் விலை குறைந்த கருவிகளை வழங்கத் துவங்கியுள்ளன. அந்த வகையில் சாம்ப்ஒன் நிறுவன கதை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
ChampOne has Introduced its C1 Smartphone at Rs 501 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்