குற்றவாளிகள் பட்டியலில் மோடி : சர்ச்சையில் சிக்கிய கூகுள்.!!

Written By:

உலகளவில் மக்கள் சந்தேகங்களை ஒட்டு மொத்தமாகத் தீர்த்து வைக்கும் தேடுபொறியாக கூகுள் விளங்குகின்றது. கூகுள் தேடலின் மூலம் பிரபலமானோர் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் கூகுள் தேடலில் இந்தியாவின் மிக முக்கிய குற்றவாளிகளின் பட்டியலைத் தேடும் போது பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றிருக்கின்றது.

டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடியின் புகைப்படம் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தவறு

கூகுள் தேடலில் மோடியின் புகைப்படம் தவறாகப் பட்டியலானது குறித்து வழக்கறிஞர் சுஷில் குமார் மிஷ்ரா என்பவர் ஏற்கனவே கூகுளிடம் முறையிட்டுள்ளார்.

திருத்தம்

கூகுள் தரப்பில் இந்தத் தவறு திருத்தி கொள்ளப்படவில்லை என்பதால் இது குறித்து வழக்கறிஞர் கூகுள் நிறுவனம் மீது வழக்கைப் பதிவு செய்திருக்கின்றார்.

விசாரணை

இந்த வழக்கு விசாரணை 31 ஆக்ஸடு அன்று நடைபெற இருக்கின்றது. மேலும் இந்தத் தவறு 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டிக்காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு

'கோளாறான தகவல்களுடன் இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களால் சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இது போன்ற குழப்பங்களைச் சரி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்' என கூகுள் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்தார்.

பதில்

இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாகக் கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில் பின் வருமாறு 'தேடல் சார்ந்த பதில்கள் கூகுளின் தனிப்பட்ட கருத்து கிடையாது, மாறாக இவை எங்களது அல்காரிதம் மற்றும் இணையப் பக்கங்களை கொண்டு பிரதிபலித்தது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Case Filed Against Google For Listing PM Modi Among 'Top 10 Criminals Of The World' Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்