நிரந்தரமாக வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்தால் சாட் டேட்டா என்னவாகும்.?

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்ய வாட்ஸ்ஆப்பில் உள்ள உங்களின் அரட்டை தரவுகள் என்னவாகும்.?

Written By:

நாளுக்கு நாள் நமக்கு அதிக அளவிலான பயன்பாட்டை வழங்கும் அதே வாட்ஸ்ஆப் தான் சில நேரங்களில் மிகவும் எரிச்சலை மூட்டும் ஒன்றாகவும் திகழ்கிறது அதன் விளைவாக நாம் வாட்ஸ்ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகிறோம்.

சரி ஒருவழியாக வாட்ஸ்ஆப்பை டெலிட் செய்வது தான் நல்ல வழி என்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்தால் என்ன நடக்கும்..? உங்கள் சாட் டேட்டா என்னவாகும். உங்கள் நண்பர்கள் தொடர்ந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்களா.? போன்றே கேள்விகளுக்கு விடை தெரியுமா..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உங்கள் நண்பர்கள் நீங்கள்முன்னர் அனுப்பிய செய்தியை படிப்பார்களா.?

உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் டெலிட் செய்யப்படுவதால் நீங்கள் அதற்கு முன்பு நீங்கள் பரிமாறிய உரை செய்திகள் ஒன்றும் காணாமல் அடிக்கப்பட்ட்டு விடாது அவைகளை உங்கள் நண்பர்களால் படிக்க முடியும்.

உங்கள் நண்பர்களின் காண்டாக்ட் பட்டியலில் இருப்பீர்களா.?

இருக்க மாட்டீர்கள். ஒருமுறை நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட உங்கள் நண்பர்களின் காண்டாக்ட் பட்டியலில் நீங்கள் தோன்ற மாட்டீர்கள். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி அவர்கள் உங்களின் முந்தையயை உரையாடல்களை பார்க்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு டாட்டா..!

நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை ஒருமுறை நீக்க, நீங்கள் தானாகவே முன்பு இருந்த அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்தும் நீக்கப்பட்டு விடுவீர்கள்.

தொலைபேசி எண்

நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை செயலிழக்க செய் என்பதை தேர்வு செய்தவுடன், நீங்கள் வாட்ஸ்ஆப் உடன் ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்த உங்கள் தொலைபேசி எண் ஆனதும் நிரந்தரமாக வாட்ஸ்ஆப்பில் இருந்து டிஸ்கனெக்ட் ஆகிவிடும்.

ரீஇன்ஸ்டால் செய்யலாமா..?

ஆம் செய்யலாம். நீங்கள் வாட்ஸ்ஆப்பை அதே எண்ணை கொண்டு எந்த நேரத்திலும் எந்த புள்ளியிலும் மீண்டும் நிறுவ முடியும். ஆனால், நீங்கள் உங்கள் கணக்கை முடக்குவதற்கு முன்பு பேக்அப் எடுத்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் வாட்ஸ்ஆப் தரவு அணுகல் பெற முடியாமல் போகலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Can I Delete My WhatsApp Account Permanently, What Will Happen if I Managed to Do So? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்