பட்ஜெட் 2017-ல் 'டிஜிட்டல் இந்தியா'விற்கு என்னென்ன லாபம்.?

டிஜிட்டல் ரெயில் புக்கிங், பாரத்நெட் ஒளியிழை, டிஜிட்டல் கிராம், டிஜிட்டல் பென்ஷன், சைபர் பாதுகாப்பு, பீம் ஆப், டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் மற்றும் பல.

|

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ள மத்திய பட்ஜெட் 2017-ல் தொழில்நுட்ப தொழில்துறை மற்றும் நுகர்வோர் தொடர்புடைய பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

அப்படியாக, டிஜிட்டல் ரெயில் புக்கிங், பாரத்நெட் ஒளியிழை, டிஜிட்டல் கிராம், டிஜிட்டல் பென்ஷன், சைபர் பாதுகாப்பு, பீம் ஆப், டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் உடன் சேர்த்து என்னென்ன அறிவிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

டிஜிட்டல் ரயில் முன்பதிவு சேவை வரி இல்லை

டிஜிட்டல் ரயில் முன்பதிவு சேவை வரி இல்லை

ஐஆர்சிடிசிவழியாக பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு எந்த சேவை வரி இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது முன்னர் ஒரு தற்காலிக நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரத்நெட் ஒளியிழை

பாரத்நெட் ஒளியிழை

பாரத்நெட் திட்டத்திற்கு ரூ.10,000/- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 1,50,000 கிமீ அளவிலாக ஒளியிழை கம்பிகள் மூலம் இணைய வசதி வழங்கும்படி திட்டமிட்டப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த திட்டத்தின் கீழ் அதிவேக பிராட்பேண்ட் ஹாட்ஸ்பாட்ஸ் மற்றும் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகலை இது வழங்கும். உடன் 150,000க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் இந்த சேவை கிடைக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கிராமம்

டிஜிட்டல் கிராமம்

நிதி அமைச்சர் மேலும் 'டிஜிகாவ்ன்' என்றவொரு புதிய முயற்சி பற்றியும் பேசினார். இந்த முயற்சியின்கீழ் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் டெலி-மருத்துவம், கல்வி, மற்றும் திறன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறிப்பிட்டுளார்.

டிஜிட்டல் பென்ஷன் முறை

டிஜிட்டல் பென்ஷன் முறை

ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஒரு டிஜிட்டல் ஓய்வூதிய விநியோக முறை எளிதாக அணுக உதவும் டிஜிட்டல் பென்ஷன் முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைப்புகள் மீதான சைபர் பாதுகாப்பு

நிதி அமைப்புகள் மீதான சைபர் பாதுகாப்பு

சைபர் பாதுகாப்பு மூலம் நிதி அமைப்பின் நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனால் கணினி அவசர நடவடிக்கை குழுவானது நிதியியல் துறையில் நிறுவப்பட்டு நிதி துறை கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் வேலை செய்யும என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீம் ஆப்பில் புதிய திட்டங்கள்

பீம் ஆப்பில் புதிய திட்டங்கள்

பீம் பயன்பாடு பணம் மற்றும் நிதி சேர்ப்பதற்காக உதவும் என்று கூறிய நிதி அமைச்சர் 125 லட்ச மக்கள் இந்த முறையை கையாளுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். உடன் தனிநபர்கள் பரிந்துரை போனஸ் திட்டம், வணிகர்களுக்கும் ரொக்க திட்டம் - என்ற இரண்டு புதிய திட்டங்களையும் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிமாற்றங்களுக்கான ஊக்குவிப்பு

டிஜிட்டல் பண பரிமாற்றங்களுக்கான ஊக்குவிப்பு

யு.பி.ஐ, யுஎஸ்எஸ்டி, ஆதார் பே, ஐஎம்பிஎஸ் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நிதியாண்டு 2017-18-ல் 2,500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்த்த ஒரு இலக்கு அமைக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Budget 2017 Highlights: BHIM App, IRCTC Service Taxes, and More. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X