0.75% டிஸ்கவுண்ட் உடன் பிராந்திய மொழில்களில் இமெயில் சேவை அறிமுகம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் 8 பிராந்திய மொழிகளில் அதன் மின்னஞ்சல் சேவை வெளியிடுகிறது. அதை பயன்படுத்திக்கொள்வது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

|

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்தியா ஒரு பணமில்லாத தேசமாக உருவாகும் இந்திய அரசாங்கத்தின் பார்வையின் கீழ், அதன் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது மின்னணு மூலம் தங்கள் கட்டணங்களை செலுத்தும் இமெயில் சேவையை தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி ஆன்லைன் அல்லது மின்னணு மூலம் தங்கள் கட்டணங்களை செலுத்துபவர்களுக்கு அவர்களின் கட்டண தொகையில் 0.75 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்று (புதன்கிழமை) மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டார்.

0.75 தள்ளுபடி

0.75 தள்ளுபடி

"மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு இப்போது (சேவை வரி நீங்கலாக) ஆன்லைன் அல்லது மின்னணு மூலம் கட்டணம் செலுத்தினால் 0.75 தள்ளுபடி / ஊக்கத்தொகை பெற முடியும். டிசம்பர் 22, 2016 முதல் மார்ச் 31, 2017 வரை போஸ்ட்பெயிட் (லேண்ட்லைன், பிராட்பேண்ட், ஜிஎஸ்எம்) மற்றும் ஜிஎஸ்எம் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றும் மனோஜ் சின்ஹா அறிவித்துளளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போர்டல் அல்லது மொபைல் பயன்பாடு

போர்டல் அல்லது மொபைல் பயன்பாடு

வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த தள்ளுபடியை பிஎஸ்என்எல் போர்டல் அல்லது பிஎஸ்என்எல் மொபைல் பயன்பாடு மூலம் மின் கட்டணம் செலுத்துவதால் பெற முடியும். கவனிக்கத்தக்க வண்ணம் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடியானது அவரக்ளின் அடுத்த கட்டணத்தில் பிரதிபலிக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

டேட்டா மெயில்

டேட்டா மெயில்

டேட்டா மெயில் ஆப் எனப்படும் பிஎஸ்என்எல்-ன் மொபைல் பயன்பாடு ஒரு இலவச ஆப் என்பதும் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தகத்து.

பிராந்திய மொழிகளில்

பிராந்திய மொழிகளில்

தமிழ், ஹிந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி என 8 பிராந்திய மொழிகளில் கிடைக்கும் இந்த பிஎஸ்என்எல் சேவையை பெற பின்வரும் பின்பற்றவும்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

1. பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் அமைப்பில் இருந்து டேட்டாமெயில் (DataMail) என்ற இலவச ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்.
2. பயனர் மின்னஞ்சல்முகவரியை பெற விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. மொபைல் எண் பதிவிட வேண்டும்
4. 'நான் ஒரு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்' என்ற செக்பாக்ஸ் தேர்வை நிகழ்த்த வேண்டும்.
5.எஸ்டிடி கோட் உடன் உங்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் எண்ணை பதிவிடவும்.
6. பதிவு பெற்ற மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்
7. உங்கள் சொந்த மொழியில் விரும்பிய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பிஎஸ்என்எல் ரூ.99/-, 149/- மற்றும் ரூ.339/- பேக் : ஏர்டெல், ஜியோவிற்கு சரியான போட்டி.!

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL unveils e-mail service in 8 regional languages. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X